2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

’காணாமலாக்கப்பட்ட விவகாரம் பாதுகாப்பு பிரதானி திரும்பியதும் விசாரிப்போம்’

Editorial   / 2018 செப்டெம்பர் 13 , மு.ப. 07:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெளிநாட்டுக்கு விஜயம் செய்துள்ள, பாதுகாப்பு பணியாளர்களின் பிரதானியான, கடற்படை முன்னாள் தளபதி வைஸ் அட்மிரல் ரவிந்திர விஜேகுணரத்ன, நாடு திரும்பியதும், அவரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்படுமென, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகள், கோட்டை நீதவான் நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டுவந்தனர்.

கொழும்பு உள்ளிட்ட பகுதிகளில், 2007ஆம் ஆண்டு, தமிழ் இளைஞர்கள் 11 பேர் கடத்தப்பட்டு, காணாமலாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய வழக்கு, கோட்டை நீதவான் லங்கா ஜயரத்னவின் முன்னிலையில் நேற்று (12) விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டது.

பாதுகாப்பு பணியாட்தொகுதியின் பிரதானியான, கடற்படை முன்னாள் தளபதி வைஸ் அட்மிரல் ரவிந்திர விஜேகுணரத்ன, நாட்டை பிரதிநிதித்துவப்படுத்தி, மெக்ஸிகோவுக்குச் பயணம் செய்துள்ளார். நாடு திரும்பியவுடன் அவரிடம் விசாரணைகளை மேற்கொள்ளப்படும் என்றும் அவ்வதிகாரிகள், நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டுவந்தனர்.

11 இளைஞர்கள் கடத்தப்பட்டு, காணாமலாக்கப்பட்ட விவகாரம் தொடர்பிலான வழக்கில், பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த “நேவி சம்பத்” என்றழைக்கப்படும், கடற்படையின் முன்னாள் லெப்டினன்ட் கொமாண்டர் பிரசாத் சந்தன ஹெட்டி ஆராச்சி என்பவர், மறைந்திருப்பதற்கு உதவி ஒத்தாசை புரிந்த குற்றச்சாட்டு தொடர்பில் வாக்குமூலம் அளிப்பதற்கே ரவி விஜேகுணரத்ன குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு கடந்த 10 ஆம் திகதியன்று அழைக்கப்பட்டிருந்தார்.

எனினும், செப்டெம்பர் மாதம் 16ஆம் திகதி நடைபெறவிருக்கின்ற மெக்ஸிகோ தேசிய தினத்தில் பங்கேற்பதற்காக, அரசாங்கத்தின் பிரதிநிதியாக, அன்று (10) அதிகாலை, பயணித்துள்ளார்.

அவர், தன்னுடைய விஜயத்தை முடித்துகொண்டு எதிர்வரும் 19 ஆம் திகதி நாடு திரும்பவுள்ளாரென, தகவல்கள் வெளியாகியுள்ளன

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .