2024 மே 02, வியாழக்கிழமை

‘கொரோனாவுக்கு வெற்றிகரமாக இலங்கை முகங்கொடுத்துள்ளது’

Editorial   / 2020 மார்ச் 07 , மு.ப. 11:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா வைரஸ் தொற்று நாட்டினுள் பரவுவதைத் தடுப்பதற்கு உரிய விஞ்ஞானபூர்வமான முறைமையொன்றை பின்பற்றுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கொரோனா ஒழிப்பு விசேட செயலணிக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

அரசாங்கமும் சுகாதாரத்துறை நிபுணர்களும் ஆரம்பம் முதலே மேற்கொண்ட நடவடிக்கையின் காரணமாக, பிராந்தியத்தில் கொரோனா வைரசுக்கு வெற்றிகரமாக முகங்கொடுத்த நாடாக இலங்கை காணப்படுவதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, ஈரான், தென்கொரியா, இத்தாலி ஆகிய நாடுகளில் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருகின்றது.

அந்நாடுகளிலிருந்து இலங்கைக்கு வருகை தருகின்றவர்களை 14 நாள்களுக்கு நோய்த்தொற்று தடைகாப்பு செய்ய வேண்டுமெனவும் ஜனாதிபதி பரிந்துரைத்துள்ளாரெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .