2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

’சரியான புரிந்துணர்வே அனைவரையும் ஒன்றிணைக்கும்’

George   / 2017 ஜூன் 05 , பி.ப. 04:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

“சரியான புரிந்துணர்வே இந்த நாட்டு மக்கள் அனைவரையும் ஒன்றிணைக்கும்” என, வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ். மாவட்டத்துக்கு நேற்று விஜயம் மேற்கொண்டிருந்த கதிர்காமம்  முருகன் ஆலயத்தின் தலைமை மதகுரு டி.பி.குமாரகே, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனை அவருடைய  இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடல் நடத்தியிருந்தார்.

இந்த கலந்துரையாடலின் நிறைவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே முதலமைச்சர் அவ்வாறு கூறியுள்ளார்.

முதலமைச்சர் மேலும் தெரிவிக்கையில், “கதிர்காமம் முருகன் ஆலயத்தின் தலமை மதகுரு, வடமாகாணத்துக்கு விஜயம் மேற்கொள்வது இதுவே முதல் தடவை என நான் நினைக்கிறேன். அவருடைய வருகையை நாங்கள் வரவேற்கிறோம். அவருடைய சந்திப்பில் பல்வேறு விடயங்களை நாங்கள் பேசியிருக்கிறோம்.

“குறிப்பாக, புரிந்துணர்வே இந்த நாட்டு மக்களை ஒன்றிணைக்கும் என்பதை சுட்டிக்காட்டியிருக்கிறேன். மேலும், 'கதிர்காமம் முருகன் ஆலயத்துக்கு வடமாகாணத்திலிருந்து ஏன் மக்கள் வருவதில்லை?' என, என்னிடம் கேட்டிருந்தார். 'வடமாகாண மக்கள் பயத்தினாலேயே வருவதில்லை; மக்களுக்குள்ள பயத்தை நீக்கினால் மக்கள் அங்கு தாரளமாக வருவார்கள்' என்பதை நான் அவரிடம் மிக தெளிவாக கூறினேன்.

“அதேபோல், வடமாகாணத்தில் தற்போதுள்ள காணாமற் போனவர்கள் பிரச்சினை, படையினரின் ஆக்கிரமிப்பிலுள்ள காணிகளின் பிரச்சினை மற்றும், வேலையற்ற பிரச்சினை தொடர்பாக கூறியதுடன்,  இது குறித்து உரிய தரப்பினருக்கு எடுத்து கூறவேண்டும் எனவும் அவரிடம்  கேட்டிருக்கிறேன்.

“வடமாகாணத்தில் உள்ள இவ்வாறான பிரச்சினைகளுக்கு தீர்வினைக் காண்பதற்கு ஒத்துழைப்புடன் செயலாற்ற தான் தயாராக உள்ளதாக அவர் என்னிடம் கூறினார்.” என, முதலமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .