2024 மே 08, புதன்கிழமை

பிரதமருக்கு இன்டர்போல் பாராட்டு

Editorial   / 2019 ஓகஸ்ட் 27 , பி.ப. 05:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகளாவிய பாதுகாப்புக்காக இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆற்றிய சேவையை இன்டர்போல் பாராட்டியுள்ளது.

உலகளாவிய பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கும், உலகளாவிய பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் ஒரு பொதுவான திட்டத்தைத் தொடங்க ஒன்றிணைந்து செயல்பட வேண்டியதன் அவசியத்தை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உணர்ந்துள்ளதாக இன்டர்போல் பொதுச்செயலாளர் ஜூர்கன் ஸ்டாக் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இன்டர்போல் தூதுக்குழு, அலரி மாளிகையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை இன்று (27) சந்தித்தது.

“இன்டர்போல் ஒரு பொலிஸ் அமைப்பாக இருந்தாலும், சில சந்தர்ப்பங்களில் அதன் பங்களிப்பை மேலும் திறமையாக வழங்க அரசியல் ஆதரவு தேவைப்படுகிறது” என, இன்டர்போல் பொதுச்செயலாளர் ஜூர்கன் ஸ்டாக் கூறியுள்ளார்.

“இலங்கையில் உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பின் போது பிரதமர் வழங்கிய அரசியல் ஆதரவும் வழிகாட்டுதல், இலங்கை பொலிஸார் மற்றும் பாதுகாப்பு படையினரின் அர்ப்பணிப்பு ஆகியவை காரணமாக சந்தேக நபர்கள் அனைவரையும் குறுகிய காலத்திற்குள் கைது செய்ய முடிந்தது” என்றும் ஜூர்கன் ஸ்டாக் பாராட்டியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X