2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

பெரிய வெங்காயத்தின் விலை குறையும்

Editorial   / 2020 மார்ச் 06 , பி.ப. 01:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவிலிருந்து பெரிய வெங்காயத்தை இறக்குமதி செய்வதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், இம்மாதம் 20ஆம் திகதிக்குப் பின்னர், உள்நாட்டுச் சந்தையில், பெரிய வெங்காயத்தின் விலை குறைவடையுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயம் ஒரு கிலோகிராம், 190 ரூபாய் என்ற சி​ல்லரை விலைக்கே விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், எதிர்வரும் நாள்களில், ஆகக்குறைந்த விலைக்கு, வெங்காயத்தைக் கொள்வனவு செய்ய முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, உளுந்து, மஞ்சள் போன்றவற்றையும் இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் தடை விதிக்கும் தீர்மானத்தை எடுத்துள்ள நிலையில், அவற்றின் விலைகளும் சந்தையில் அதிகரித்துள்ளது.

எவ்வாறாயினும், இந்தத் தடையானது, அடுத்த வாரமளவில் நீக்கப்படுமென எதிர்பார்க்கப்படுவதாக, அத்தியாவசிய உணவு இறக்குமதியாளர் சங்கத்தின் செயலாளர் ஹேமக்க பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

இது விடயமாக, பிரதமர் மஹிந்தவை சந்தித்துத் தாம் பேசியதாகவும் இந்தத் தடையை நீக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளதாகவும், அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .