2024 மே 02, வியாழக்கிழமை

புலிகளுடனான போர் வியூகங்களை இந்தியாவுடன் பகிர இலங்கை முடிவு

Super User   / 2010 மே 19 , பி.ப. 01:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய நக்சலைட்டுக்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு ஆலோசனை வழங்கத் தயார் என இலங்கை அறிவித்துள்ளது. விடுதலைப் புலிகளை கட்டுப்படுத்தியதன் மூலம் பெற்றுக்கொள்ளப்பட்ட அனுபவங்களை பகிர்ந்துகொள்ளத் தயார் என இலங்கை, இந்தியாவிடம் தெரிவித்துள்ளது.
 
நக்சலைட்டுக்களுக்கு எதிராக வெற்றிகரமான போராட்டத்தை முன்னெடுப்பதற்கு இந்திய துணை இராணுவக் குழுக்களுக்கு, இலங்கைப் படையினர் பயிற்சிகளை வழங்க முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
 
இந்தியாவிற்கான இலங்கைத் தூதுவர் பிரசாத் காரியவசம், இந்திய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனனிடம் இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளார்.
 
நக்சலைட்டுக்கள் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பிரதேசங்களிலிருந்து அவர்களை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பது தொடர்பில் மட்டும் இலங்கை அரசாங்கம் உதவி வழங்க உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

You May Also Like

  Comments - 0

  • sensiv Thursday, 20 May 2010 06:28 AM

    ஏன் அப்படிச் செய்ய வேண்டும் .இந்தியாவில் கொத்துக் குண்டுகளைப் போடமாட்டர்களே. ஏவு,ஆளில்லா விமானங்களை பாவிக்கலாம்.ஆனால் விமானங்கள் குண்டு பொழியப் போவதில்லை. மாட்டவே. முதலில் இலங்கை இராணுவத்தை இந்தியா பாவிக்குமா?

    Reply : 0       0

    sheen Thursday, 20 May 2010 10:32 PM

    நக்சலைட்டுகள் இந்திய மத்திய பகுதிகளில் மக்களின் ஆதரவுடன் பொலீஸ்கொடுமை அரசியல்வாதிகளின் கொடுமைகளுக்கு எதிராக போராடுகின்றனர். இவர்கள் எதிர்ப்பவை: வேலையின்மை நிலங்கள் பறிப்பு கல்விநிலையங்களில் பெரும்தொகை வாங்கிக்கொண்டு மருத்துவர் இஞ்சினியர் போன்ற தொழிற்படிப்புகளுக்கு பட்டம்வழங்கல் அணைக்கட்டு கட்டுவதாக மக்களை அப்புறப்படுத்துதல் ஆகும் இவை எல்லாம் பிரிவினைவாதம் அல்ல, இவர்கள் கடற்புலிகள் போல் நீரிலும்நிலத்திலும் வாழ்கின்றவர்கள் அல்ல. மாநிலசுயாட்சி பொலீஸ் அதிகாரம் இதில் மிகமோசமாக vimarsana maagiradhu.

    Reply : 0       0

    KONESWARANSARO Friday, 21 May 2010 03:56 PM

    விதி யாரை விட்டது? தமிழர்களுக்கு இந்தியா செய்த துரோகத்துக்கு பலன் கிடைக்கவேண்டாமா? மூக்கறுத்துக் கடவுளைக் கண்ட இலங்கையின் கதை கேட்டு இந்தியாவும் உலக அரங்கில் மூக்கறுபடப் போகின்றது.

    Reply : 0       0

    sheen Friday, 21 May 2010 08:35 PM

    மாநிலங்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் அதிகாரங்களினாலே இந்த கொடுமைகள் நடைபெறுகின்றன. இந்திராகாந்தி இருக்கும் போது மாநிலங்களை அவ்வாறு போராட்டம் நடக்கும் என்று பயந்தால் சட்டம் ஒழுங்கு சீர்குலையும் முன் தனது ஆட்சியின் கீழ் கொண்டு வந்துவிடுவார். அது மத்தியில் கூட்டாட்சி வந்தபின் இல்லை இராணுவத்தை அனுப்ப மைய அரசு பயப்படுகிறது.பொலீஸ் அதிகாரத்துக்கு ஆசைப்பட்டு மாநிலங்களை பிரிக்கவும் செல்வாக்கான அரசியல்வாதிகள் பொய்யான காரணங்களில் தற்கொலையாக போராடுவோம் என்று மிரட்டல்!

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .