2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

முஸ்லிம் காங்கிரஸிற்குள் மீண்டும் பிளவு?ஹசன் அலி மறுப்பு

Super User   / 2010 மே 08 , மு.ப. 04:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சியை விட்டு பிரிந்து அரசுடன் இணைந்து கொள்ளவுள்ளார்கள் என்றும் இதற்கான முக்கிய பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுவருகின்றது என்று வாராந்த பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது.

இது சம்பந்தமாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகம் ஹசன் அலியிடம் தமிழ்மிரர் இணையதளம் சற்று முன் தொடர்பு கொண்டு வினவியது.

இவ்வாரான செய்திகள் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது என்றும், எமது கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசுடன் இணையவுள்ளார்கள் என்ற செய்தியை மறுப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் ஒரு சில பத்திரிகைகள் அரசுடன் சேர்ந்து கொண்டு எமது கட்சிக்கு எதிராக செயற்பட்டு வருகின்றனது  என்றும் அவர் குறிப்பிட்டார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது எமது கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கட்சியை விட்டு பிரிந்து செல்லமாட்டோம் என்று மக்கள் மத்தியில் வாக்குறுதியளித்துள்ளனர். அவ்வாறு நாங்கள் அரசுடன் சேர்வதாக இருந்தால் தாங்கள் அனைவரும் கட்சித் தலைவருடன் தான் ஒன்று சேர்வது என்று உயர்பீடக் கூட்டத்தில் தீர்மானித்துள்ளதாகவும் ஹசன் அலி தெரிவித்தார்.(R.A)


You May Also Like

  Comments - 0

  • nuah Saturday, 08 May 2010 08:56 PM

    அரசியலில் நண்பனும் இல்லை; பகைவனும் இல்லை நிரந்தரம்: என்ன பிரயோஜனம் என்பதுதான். ஆனால் ஏற்கனவே அவ்வாறு கட்சி மாறி போனவர்களை மக்கள் நிராகரித்து இருக்கின்றனர் என்பதையும் அவர்கள் சிந்தித்து செயல் படவேண்டும் அமைச்சர்களாவது முக்கியமல்ல அதனால் என்ன செய்ய இயலும் என்பதே, வெறும் மதிப்பும் மரியாதையும் கொஞ்ச காலத்துக்கே! மக்கள் கட்சி மாறுங்கள் என்று வற்புறுத்துவதாக சொல்லும் எம்.பிக்களும் இருக்கத்தான் செய்கின்றனர் நம் மத்தியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு எப்படியோ? பொறுத்து இருந்து பார்க்கவேண்டும் ஏழு வருடம்!

    Reply : 0       0

    azeem Sunday, 09 May 2010 08:58 PM

    அமைச்சு பதவிக்கு சோரம் போறவர்கள் கட்சிக்குத் தேவை இல்லை.
    போறவர்கள் போகட்டும் ,தலைவர் மட்டும் போதும் மக்களுக்கு .



    .

    Reply : 0       0

    Abu azaath Tuesday, 11 May 2010 03:04 AM

    தலைவருடன் சேர்ந்து எல்லோரும் இணைவது மிக நல்லது. இன்று நாட்டு நடப்பின்படி எல்லோரும் ஒருபக்கம் அதாவது அரசின் பக்கம் இருந்தால் சேவை செய்யா விட்டாலும் துவேசிகளின் கடும் பார்வை pattumawathu மாற்றலாம் அல்லவா..

    Reply : 0       0

    Abu azaath Tuesday, 11 May 2010 03:13 AM

    நல்லது எல்லோரும் ஒருபக்கம் இருப்போம்.விமரிசனம், தம்பட்டம் அடித்தவர்கள் சேவை seiyattum, இவர்களது சேவை தேவை இல்லை.போட்டி பொறாமை kuraium.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .