2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

மஹிந்த இருந்திருந்தால் 'தீர்ப்பையே எட்டி உதைத்திருப்பார்'

Gavitha   / 2016 ஜூலை 13 , மு.ப. 03:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

'மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில், உயர்நீதிமன்றத்தினால் இவ்வாறானதொரு தீர்ப்பு வழங்கப்பட்டிருக்குமாயின், தீர்ப்பை எட்டி உதைத்துத் தள்ளிவிட்டு, தீர்ப்பளித்த உயர்நீதிமன்ற நீதியரசர்களையே வீட்டுக்கு அனுப்பி வைத்திருப்பார்' என்று ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில், நேற்றுச் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷண ராஜகருணா, மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், 'பெறுமதி சேர்க்கப்பட்ட வரி (வற்), தேசத்தைக் கட்டியெழுப்பும் வரி ஆகியவற்றின் அதிகரிப்புக்கு உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள இடைக்காலத் தடையுத்தரவுக்கு, அரசாங்கம் தலைவணங்குகின்றது.

அத்தியாவசியப் பொருட்களில் 15 பொருட்கள், நிவாரண விலைக்கு வழங்கப்படும். கடந்த அரசாங்கத்தின் போது உயர்நீதிமன்றத்துக்கு விடுத்த அழுத்தங்களை, இந்த அரசாங்கம் செய்யாது. அக்காலத்தில், நீதிமன்றங்களின் தீர்ப்புகள் அலரிமாளிகையிலேயே எடுக்கப்பட்டன. எனினும், நல்லாட்சி அரசாங்கம், நீதிமன்றங்களின் சுயாதீனத்தின் மீது நம்பிக்கை கொண்டிருக்கிறது. நீதிமன்றத்தின் சுயாதீனத்தை பாதுகாக்கின்றது என்றும் அவர் கூறினார்.  அதிகரிக்கப்பட்ட வரியான வற் குறைக்கப்படும். கடந்த அரசாங்கத்தினால் பெற்றுக்கொள்ளப்பட்ட கடன் காரணமாகவே, இந்த வரியை அதிகரிக்க வேண்டிய நிலைமை நல்லாட்சிக்கு ஏற்பட்டது' என்றும் அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .