2024 மே 02, வியாழக்கிழமை

யாழ். விஞ்ஞான சங்கத்தின் 17ஆவது வருடாந்த செயலமர்வு இன்று

Super User   / 2010 ஏப்ரல் 21 , மு.ப. 07:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாண விஞ்ஞான சங்கத்தின் 17ஆவது வருடாந்த செயலமர்வின் முதல் நாளான இன்று  "உடலுக்கு வெளியே கருக்கட்டல் -இலங்கையில் முன்னேறியுள்ள கருவளக் கவனிப்பு'" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தப்படவுள்ளது. மகப்பேற்றியல் சக பெண்நோயியல்த்துறை பேராசிரியரும், கொழும்பு மருத்துவ பீடாதிபதியுமான பேராசிரியர் ஹர்சலால் செனவிரட்ன மேற்படி உரையை நிகழ்த்தவுள்ளார்.

இதனையடுத்து,  "பாரம்பரிய உணவுகள்" எனும் தலைப்பில் கருத்தரங்கு நடைபெறவிருக்கிறது.  "மீன்களில் அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள்", "மருத்துவத்தில் கதிர்வீச்சின் பாதுகாப்பான பயன்பாடு" ,  "தாவர பரிகரிப்பு-குறைந்த தொழில்நுட்ப உயிர்ப் பரிகரிப்பு",  "நிலத்தடி நீரை முகாமைப்படுத்துவதில் கருவியாகும் நீர் பாதிப்புறும் தன்மையின் கணிப்பீடு  ஆகிய தலைப்புக்களில்  உரை நிகழ்த்தப்படவுள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .