2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

வடக்கு - கிழக்கு மாவட்டங்கள் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் டெங்கு அபாயம்

Princiya Dixci   / 2016 டிசெம்பர் 12 , மு.ப. 03:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

10 மாவட்டங்களில் டெங்கு அபாயம் அதிகரித்துள்ளதாகத் தெரிவித்த சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன, டெங்கு நுளம்புகளை ஒழிக்கும் நடவடிக்கை, இன்று ( 12) முதல் தீவிரப்படுத்தப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, காலி, யாழ்ப்பாணம், இரத்தினபுரி, குருணாகல், புத்தளம், மட்டக்களப்பு அம்பாறை ஆகிய மாவட்டங்களிலேயே டெங்குக் காய்ச்சல் அபாயம் அதிகரித்துள்ளதாக, சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இதன் காரணமாக டெங்கு அபாயம் ஏற்பட்டுள்ள 10 மாவட்டங்களில் உள்ள, சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவுகள் 30 இல் உள்ள சுகாதார அதிகாரிகளின் விடுமுறை இரத்துச் செய்யப்பட்டுள்ளது. 

டெங்கு காய்ச்சல் அறிகுறிகள் முற்றாக இல்லாதொழிக்கப்படும் வரையிலும், அவ்வதிகாரிகளின் விடுமுறைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளன என்றும் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. 

இதேவேளை, டெங்கு நுளம்புகள் பரவும் வகையில், சுற்றுச்சூழலை வைத்திருப்போருக்கு 25ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் அறவிடுவதற்கான வர்த்தமானி அறிவித்தலையும் விரைவில் வெளியிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .