2024 மே 02, வியாழக்கிழமை

எக்னெலிகொட காணாமல்போய் இன்றுடன் ஒரு வருடம்; ஐ.நா.விடம் மகஜர் கையளிப்பு

Menaka Mookandi   / 2011 ஜனவரி 24 , மு.ப. 09:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(றிப்தி அலி)

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலியகொட காணாமல் போய் இன்றுடன் ஒரு வருடம் ஆகின்ற நிலையில் அவரைக் கண்டுபிடித்து தருமாறு வலியுறுத்தி ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கி மூனிடம் கையளிப்பதற்கான மனுவொன்று ஐ.நா.வின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி நீல் பூனேவிடம் எக்னெலிகொடவின் மனைவியினால் இன்று கையளிக்கப்பட்டது.

பிரகீத் எக்னெலியகொட காணாமால் போய் ஒரு வருடங்களாகியுள்ள நிலையில் அவரை கணடுபிடித்து தருமாறு இலங்கை அரசாங்கம், மனித உரிமை ஆணைக்குழு உட்பட பலரிடம் வேண்டுகோள் விடுத்தும் பயனலிக்காத நிலையிலேயே ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகத்திடம் வேண்டுகோள் விடுக்க வந்துள்ளதாக பிரகீத் எக்னெலியகொடவின் மனைவி தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பாங்கி மூனுக்கு இன்று திங்கட்கிழமை கையளித்த மனுவுடன் ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர் குழுவிற்கு கடந்த டிசம்பர் 15 அனுப்பிய கடிதம், பிரகீத் எக்னெலியகொட தொடர்பில் இலங்கை அரசின் பதில் நீதிமன்ற தகவல்கள் மற்றும் மனித உரிமை ஆணைக்குழுவில் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாடு என்பன இணைக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலியகொட காணாமல் போனமை தொடர்பில் இலங்கை உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம் சார்பாக  ஹெத்தட்டிகொடவும், சுதந்திர ஊடக இயக்கம் சார்பாக சுனில் ஜயசிரியும், ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் சார்பாக என்.எம்.அமீனும், இலங்கை தமிழ் ஊடகவியலாளர் சங்கம் சார்பாக ஏ.நிக்ஸன், தெற்காசிய சுதந்திர ஊடக இயக்கம் சார்பாக சாமினி பெய்ல் ஆகியோர் கையொப்பமிட்டு  ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி நீல் பூனேவிடம் மகஜர் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .