2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

நுளம்புப் பெருக்கத்திற்கு இடமளித்த அரச அதிகாரிக்கு 10000 ரூபா அபராதம்

Super User   / 2010 ஜூலை 16 , மு.ப. 08:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனது வீட்டு வளாகத்தை நுளம்புப் பெருக்கத்திற்குச் சாதகமான வகையில்  வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் அரச அதிகாரி ஒருவருக்கு கல்கிஸை மேலதிக நீதிவான் இன்று 10000 ரூபா அபராதம் விதித்தார்.

தேசிய கால்நடை அபிவிருத்திச் சபையில் முகாமையாளராக பணியாற்றும் தெஹிவளையைச் சேர்ந்த அதிகாரியொருவருக்கே இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

தெஹிவளை, கல்கிஸை மாநகரசபை பிரதேசங்கள் டெங்கு அச்சுறுத்தல் மிகையான பகுதியாக பிரகடணப்படுத்தப்பட்டுள்ளது.

இப்பகுதியில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்ததால் டெங்கு நோயைக் கட்டுப்படுத்தும் நோக்குடன் மேற்படி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .