2024 மே 11, சனிக்கிழமை

ஹம்பாந்தோட்டை துறைமுக கடனுக்காக 1110 கோடி ரூபா வட்டி

Super User   / 2011 ஜூன் 24 , பி.ப. 12:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஹம்பாந்தோட்டை துறைமுக அபிவிருத்தித் திட்டத்திற்காக சீனாவிடமிருந்து வாங்கிய கடனுக்கு இலங்கை அரசாங்கம் 111.21 மில்லியன் அமெரிக்க டொலர்களை  அதாவது சுமார் 11.1 பில்லியன் (1110 கோடி) ரூபா வட்டியாக செலுத்த வேண்டியிருப்பதாக அரசாங்கம் இன்று நாடாளுமன்றில் தெரிவித்துள்ளது.

இத்திட்டத்திற்கான மொத்த செலவு 360 மில்லியன் டொலர்களாகும்.  இவற்றில் 54 மில்லியன் டொலர்கள் மாத்திரம் துறைமுக அதிகார சபையால் வழங்கப்பட்டது. எஞ்சிய தொகை சீனாவின் நுஓ-ஐஆ வங்கியிடமிருந்து பெறப்பட்டது.

இதற்காக வட்டியுடன் சேர்த்து அரசாங்கம் 418.21 மில்லியன் அமெரிக்க டொலர்களை 31.12.2022 வரை 11 தவனைகளில் மேற்படி சீன வங்கிக்கு செலுத்த வேண்டும். அடுத்த வருடம் முதல் பணம் திருப்பிக்கொடுக்கப்படும். முதலாவது தவணை கொடுப்பனவு 46.81 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.  இரண்hவது கொடுப்பனவு 45.05 மில்லியன் டொலர்கள். 3 ஆவது கொடுப்பனவு 43.29 மில்லியன் டொலர்கள். 10 ஆவது கொடுப்பனவு 29.23 மில்;லியன் டொலர்கள்.

ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலாக இவ்விபரங்கள் நாடாளுமன்றில் தெரிவிக்கப்பட்டன. ( கெலும் பண்டார, யொஹான் பெரேரா)
 


You May Also Like

  Comments - 0

  • Niththi Friday, 24 June 2011 11:57 PM

    கந்துவட்டியா?

    Reply : 0       0

    malwanai maindan Saturday, 25 June 2011 02:30 AM

    நெனச்ச்ம் மருந்துக்கு இருபது என்று சொல்லும் போது ?......

    Reply : 0       0

    IBNU ABOO Saturday, 25 June 2011 03:32 AM

    சீனா இலங்கைக்கு செய்த, செய்கின்ற உதவிகளுக்கு பணம் கறக்கிற மாற்றுவழிதான் இது .சீனாவுக்கு இலங்கை நல்ல லாபகரமான நட்புநாடு.

    Reply : 0       0

    Fahim Saturday, 25 June 2011 12:18 PM

    நாட்டை குட்டிச் சுவராக்கத் திட்டமோ? என்ன அநியாயம்!

    Reply : 0       0

    goodheart Saturday, 25 June 2011 03:13 PM

    அறிவிலிகளான எங்கள் பணத்தைக் கொண்டுதான் வட்டியும் முதலுமாக திருப்பிக் கொடுக்கப்போகிறார்கள், இதற்காக தங்களுடைய இரகசியப் பணத்திலிருந்தா கொடுக்கப் போகிறார்கள் ???????

    Reply : 0       0

    beyond boundry Saturday, 25 June 2011 09:45 PM

    இந்த செய்தி பூரணமற்றது. ஆயிரம் கோடி ரூபாய் எத்தனை வருட தவணை என்பதை தெளிவு படுத்த வேண்டும் . கடன் தொகை , காலம் என்பன ஆராயப்பட வேண்டும். இதுவே நீண்ட கால கடன் என்றால் , அரசாங்கம், துறைமுகத்திலிருந்து வரும் வருமானத்தை கொண்டு கடனையோ வட்டியையோ செலுத்தலாம். எல்லா விடயத்திலும் அரசாங்கத்தை சாடுவது ஒரு நல்ல பிரஜைக்குரிய தன்மை இல்லை.

    Reply : 0       0

    IBNU ABOO Sunday, 26 June 2011 03:23 AM

    நான் ரசித்த ஒரு கமெண்ட் நித்தி என்பவருடைய கந்து வட்டியா ? நிற்க, காலம்சென்ற அமைச்சர் அஷ்ரப் அவர்களின் கனவு துறைமுகமான ஒலுவில் துறைமுகத்தை அம்போ என்று கைவிட்டு அனாதரவாக்கிவிட்டர்களே. இது பிரதேசவாத பாகு பாட்டின் ஒரு அங்கமே. தற்போதைய மு,கா.தலைமைத்துவமும் அஷ்ரப் அவர்களால் அரசியல் வெளிச்சத்துக்கு வந்து எம்பியாகவும் அமைச்சராகவும் வந்தவர்கள் ஒலுவில் துறைமுகத்தை இயங்கவைத்து அஷ்ரப் அவர்களின் இலட்சிய கனவை நனவாக்க முயற்சிப்பது இவர்களது தார்மீக KADAMAI

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .