2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

சவூதியில் 17 வருடங்களாக அடிமையாக நடத்தப்பட்ட பணிப்பெண் மீட்பு

Super User   / 2011 பெப்ரவரி 19 , மு.ப. 08:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

சவூதி எஜமானரால் சுமார் 17 வருடங்களாக அடிமையாக நடத்தப்பட்டுவந்த இலங்கைப் பணிப்பெண் ஒருவரை சவூதி அரேபியாவிலுள்ள இலங்கைத் தூதரகம் மீட்டுள்ளது.

56 வயதான குசுமா நந்தனி எனும் பெண்ணே மீட்கப்பட்டவராவார். இவர் 1994 ஆம் ஆண்டு சவூதி அரேபியாவுக்கு சென்றுள்ளார். கடந்த 15 வருடங்களாக அவர் எவ்வித ஊதியமும் வழங்கப்படாமல் வீட்டில் தடுத்துவைக்கப்பட்டிருந்ததுடன் இலங்கையிலுள்ள உறவினர்களுடன் அவர் தொடர்புகொள்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டு வந்துள்ளார்.

'சவூதி அரேபிய பணிப்பெண்கள் விடயததில் இது புதிய சாதனை விடயமாகும். இப்பெண் ஒரு வீட்டில் 15 வருடங்களாக அடிமையாக நடத்தப்பட்டுள்ளார். பின்னர் அவரின் அனுசரணையாளரின் சகோதரரின் வீட்டுக்கு மாற்றப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு 2 வருடங்களாக சம்பளம் வழங்கப்பட்டுள்ளது' என இலங்கை தூதரகத்தின் தொழிலாளர் நலன்புரி அதிகாரி சுனில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
 


You May Also Like

  Comments - 0

  • xlntgson Saturday, 19 February 2011 08:41 PM

    உயிருடன் மீட்டார்களே, அது பெரிய விடயம், எப்படி எல்லாரும் மறந்து போயினர்? நல்லவேளை அவருக்கு நினைவு தடுமாறும் வயதில் மீட்காமல்...மிகக் கஷ்டத்துடன் தான் தாய்மொழி பேசுகிறாராம்! இது கொத்தடிமை என்னும் வழமையை சேர்ந்தது ஆப்ரிக்காவிலும் சீனா, இந்தியா ஆகிய நாடுகளில் இன்னும் மறைவாக கடைப் பிடிக்கப்படுகிறது, யாரேனும் துப்புக்கொடுத்தால் ஒழிய பிடிக்க இயலாது! அவர்களை கல்வி அறிவில்லாமலும் யாரோடும் கதைக்க விடாமலும் வைத்திருப்பதிலேயே அறியலாம். நமக்கென்ன என்று இருந்து விடுவதனாலும் பொறாமையால் காட்டிக்கொடுத்தால் தான்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .