2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

19 இலட்சம் பேர் வாக்களிக்கவில்லை

Kanagaraj   / 2014 மார்ச் 30 , பி.ப. 09:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடந்து முடிந்த மேல் மற்றும் தென் மாகாண சபைத்தேர்தல்களில் 19 இலட்சத்து 76 ஆயிரத்து 810 பேர் வாக்களிக்கவில்லை.

இரு மாகாண சபைகளுக்குமான தேர்தல்களில்; வாக்களிப்பதற்கு 58 இலட்சத்து 98 ஆயிரத்து 428 பேர் தகுதிபெற்றிருந்தனர். அதில் 39 இலட்சத்து 21 ஆயிரத்து 612 பேர் மட்டுமே வாக்களித்துள்ளனர்.

அளிக்கப்பட்ட வாக்குகளில் 1 இலட்சத்து 61 ஆயிரத்து 11 வாக்குகள் செல்லுப்படியற்றதாகும்.

கடந்த முறை நடைபெற்ற மேல் மற்றும் தென் மாகாண சபைத்தேர்தல்களின் பிரகாரம் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு இம்முறை 247103 வாக்குகள் குறைந்துள்ளன. ஐக்கிய தேசியக்கட்சிக்கு 4700 வாக்குகள் அதிகரித்துள்ளன.

2009 ஆம் ஆண்டு நடைபெற்ற இரு மாகாண சபைகளுக்குமான தேர்தலுடன் ஒப்பிடுகையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உறுப்பினர்களின்; எண்ணிக்கையில் 17 குறைந்துள்ளது. ஐக்கிய தேசியக்கட்சியின் உறுப்பினர்கள் 2 குறைந்துள்ளது.

இதேவேளை, தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்ட 1333 வேட்பாளர்கள் கட்டுப்பணமாக 26 இலட்சத்து 60 ஆயிரம் ரூபா அரசுடமையாக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .