2024 மே 02, வியாழக்கிழமை

வவுனியாவில் பாடசாலை மாணவர்களுக்கு போக்குவரத்து விதிகள் தொடர்பான கருத்தரங்கு

Suganthini Ratnam   / 2010 ஜூலை 16 , மு.ப. 05:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

வவுனியா நகரில் விபத்துக்கள் அதிகரித்து வருவதையிட்டு பாடசாலை உயர்தர வகுப்பு மாணவர்கள் சுமார் 1000 பேருக்கு போக்குவரத்து விதிகள் தொடர்பான விளக்கக் கருத்தரங்கு நேற்று வியாழக்கிழமை வவுனியா நகரசபை மண்டபத்தில் நடைபெற்றது.

போக்குவரத்து பொலிஸ் பிரிவினால் நடத்தப்பட்ட இந்த நடைமுறையில், போக்குவரத்தினை எவ்வாறு மேற்கொள்ள வேண்டும் என்பது தொடர்பிலும்   பாதசாரிகள் எவ்வாறு நடைபாதையினை பயன்படுத்தவேண்டும் என்பது தொடர்பிலும்    செயல்முறையில் செய்து காண்பிக்கப்பட்டது.



விபத்துக்களை தவிர்க்கும் நோக்குடன் இவ்வாறான செயல்முறை கண்காட்சி செட்டிகுளம் பொலிஸ் பிரிவிலும் நடைபெற்றது.

வவுனியா நகருக்கு ஒரு நாளைக்கு குறைந்தது 50,000 மக்கள் வந்து செல்வதுடன், 500க்கும் மேற்பட்ட வாகனங்கள் வீதியை கடந்து செல்கின்றன.

24 மணிநேரமும் போக்குவரத்து பொலிஸ் பிரிவினர் ஏ -9 வீதியில் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறிப்பாக காலையில் பாடசாலை ஆரம்பிக்கும் நேரத்திலும் பாடசாலை மூடப்படும் நேரத்திலும் அதிகளவு வாகன நெருக்கடிகள் ஏற்படுகின்றது.

மக்கள் போக்குவரத்து விதிகளை மீறி நடமாடுவதுடன்,  பாதைகளை கடக்க மஞ்சல் கோடு இருந்தபோதிலும் அதனை மீறி செல்வது அவதானிக்கப்பட்டுள்ளது. இதனாலேயே,  விபத்துக்களும்  உயிர் இழப்புக்களும் ஏற்படுகின்றது. 

அனைவருக்கு விழிப்புணர்வு ஊட்டும் வகையில் பொலிஸாரினால் ஏற்பாடு செய்யப்பட்ட செயல்முறை கண்காட்சி பயனுடையதாகவே அமைந்திருந்தது எனத் தெரிவிக்கப்படுகிறது.



 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .