2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

மன்னார் குடிநீர் விநியோக பவுசர்களுக்கு கட்டுப்பாடு

Suganthini Ratnam   / 2010 ஜூலை 16 , மு.ப. 09:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

மன்னார் நகரில் குடிநீர் விநியோகத்தில் ஈடுபட்டுள்ள பவுசர்கள் அருகிலுள்ள கிராமமொன்றின் கிணற்றிலிருந்து நீர் எடுப்பதற்கு புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

மன்னார் நகரப் பகுதியிலும் அதனை அண்டிய கிராமங்களுக்கும் தனியார் பவுசர்கள் மூலம் குடிநீர் விற்பனை செய்யப்படுகிறது.

இவ்வாறு தனியார் பவுசர்கள் மூலம் விற்பனை செய்யப்பட்டு வந்த குடிநீர்  மன்னாரிலிருந்து சுமார் 6 கிலோமீற்றர் தொலைவிலுள்ள கீரி என்னும் கிராமத்திலுள்ள பொது கிணறொன்றிலேயே எடுக்கப்பட்டு வருகிறது.

அக்கிராமத்தில் இரவு பகலாக சுமார் 15 பவுசர்கள் நீரைப் பெற்று வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகிறது. நாளொன்றுக்கு 100 தடவைகளுக்கு மேல் நீர் எடுப்பதினால் அக்கிணற்றில் நீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதோடு நிலத்தடி நீரும் வெகுவாகக் குறைந்து உவர் நீராக மாறும் நிலை ஏற்பட்டு வருகின்றது.

இதனைக் கட்டுப்படுத்தும் வகையில் அக்கிராமத்திலுள்ள கிராம அபிவிருத்திச் சங்கங்கள் கடிதம் மூலமாக ஆயர் உட்பட அதிகாரிகள் பலருக்கு தெரியப்படுத்தியிருந்தனர்.

இந்நிலையில், இவ்விடயம் தொடர்பாக மன்னார் பிரதேச செயலாளர் திருமதி ஸ்ரான்லி டிமேல் குறித்த இடத்திற்கு சென்று பார்வையிட்டார்.

இதனைத் தொடர்ந்து நேற்று வியாழக்கிழமை மன்னார் பிரதேச செயலகத்தில் மன்னார் பிரதேச செயலாளர் திருமதி ஸ்ரான்லி டிமேல் தலைமையில் பவுசர் உரிமையாளர்கள், கிராம அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் மற்றும் மன்னார் நகரசபை பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டு இவ்விடயம் தொடர்பாக முடிவுகள் மேற்கொள்ளபட்டன. இக்கிணற்றிலிருந்து நீர் எடுப்பதை மட்டுப்படுத்தும் வகையில் நாளொன்றிற்கு 1 பவுசர் 3 தடவைகள் மட்டும் நீரை எடுக்க முடியும். காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே நீரை எடுக்க முடியும் எனவும் முடிவெடுக்கப்பட்டது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .