2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

மட்டக்களப்பு சிறைக் கைதிகளுக்கு கணினி மொழிப் பயிற்சிகள்

Suganthini Ratnam   / 2010 ஜூலை 16 , மு.ப. 10:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிறைச்சாலை தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு சிறைச்சாலைக் கைதிகளுக்கான கணினிப் பயிற்சி வகுப்பும், நூலகமும் நேற்று வேர்ல்ட்விசன் நிறுவனத்தினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

வேர்ல்ட்விசன் நிறுவனத்தின் பிள்ளைகள், இளைஞர்கள், வழிகாட்டல் திட்டத்தின் கீழ் சிறைச்சாலைக் கைதிகளின் புனர்வாழ்விற்காகவே நேற்று வியாழக்கிழமை சிறைச்சாலை தினத்தை முன்னிட்டு இந்த கணினிகளும் நூலகமும் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

வேர்ல்ட்விசன் நிறுவனத்தினால் ஒரு மில்லியன் செலவில் இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் இந்தக் கைதிகள் விடுதலையாகி செல்லும்போது  ஒரு முன்னேற்றத்துடன் செல்ல வேண்டும் எனும் நோக்கத்திலும், மேலும் மொழிவிருத்திக்காக சிங்களம், ஆங்கிலம் பயிற்சி வகுப்புக்களையும் நடத்த திட்டமிட்டுள்ளதாக வேர்ல்ட்விசன் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு சிறைச்சாலை அதிகாரி ஏ.கே.பண்டார தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வேர்ல்ட்விசன் நிறுவன இணைப்பாளர் வி.ஈ.செல்வநாதன், முகாமையாளர்களாகிய எஸ்.பி.பிறேமச்சந்திரன், ஏ.ரவீந்திரன், அனுராஜ், ஈ.ரணில் மற்றும் சிறைச்சாலை நலம்புரிச் சங்க செயலாளர் வைத்திய தியாகலிங்கம் பிரதான சிறைச்சாலை பிரபாகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .