2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

ஜனாதிபதியை ஹக்கீம் இன்று சந்திக்கிறார்

Super User   / 2010 ஓகஸ்ட் 23 , பி.ப. 08:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

  (றிப்தி அலி)

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமிற்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று கண்டியிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் இடம்பெறவுள்ளதாக முஸ்லிம் காங்கிரஸ் வட்டாரங்கள் தமிழ்மிரர் இணையத்தளத்திற்குத்  தெரிவித்தன.

இதன் போது  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்துடன் இணைவது தொடர்பில் கலந்துரையாடப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவ்வட்டாரங்கள் தெரிவித்தன.

இதேவேளை, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் அரசியலமைப்பு திருத்தம் தொடர்பாக இன்று மாலை இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமும் கலந்துகொண்டார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமிற்கும் இடையிலான சந்திப்பொன்று கடந்த வியாழக்கிழமை நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் இடம்பெற்ற போது நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம்
விடுத்த வேண்டுகோள்களுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சாதகமான பதில் அளித்தமையும் குறிப்பிடத்தக்கது.   

இதேவேளை,  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ், அமைச்சுப் பதவிகளை பெறாவிட்டாலும் அரசாங்கத்துடன் இணைய வேண்டும் என கட்சித் தலைமைத்துவத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


You May Also Like

  Comments - 0

  • nawshad Tuesday, 24 August 2010 11:40 AM

    puthisalithanam kalanthe rajathanthire nadavadikkai.

    Reply : 0       0

    Amjath Tuesday, 24 August 2010 01:13 PM

    ஜனாதிபதி என்னதான் தாளம் போட்டாலும் தலைக்கு தலை சாய்க்காவிட்டால் தலை சாயாது என்பது மட்டும் உண்மை....

    Reply : 0       0

    D W K David Tuesday, 24 August 2010 02:21 PM

    பண்பும் நல்ல குணங்களும் கொண்டவர் ஹக்கீம் .
    அவர் சேவை கட்டாயம் நாட்டுக்கு தேவை

    டக்லஸ் வசந்த குமார் டேவிட்.

    Reply : 0       0

    nawshadn Tuesday, 24 August 2010 03:02 PM

    putthisalithanamana arsiyel naharvu.

    Reply : 0       0

    nawshadn Tuesday, 24 August 2010 03:03 PM

    thanpotheye arasiyel nileyil sirenthe oru muyetchi.

    Reply : 0       0

    farhan hassen Tuesday, 24 August 2010 07:36 PM

    இதை ஒரு நல்ல சந்தர்ப்பமாய் எடுத்து நாட்டு மக்களுக்கு சேவை செய்ய முன் வருவீர்களானால் நாட்டுக்கும் , மக்களுக்கும் சிறப்பாய் இருக்கும்.

    Reply : 0       0

    riza Tuesday, 24 August 2010 08:04 PM

    இந்த ரவூப் ஹக்கிமுக்கு வேற வேலை இல்லையா? இவருக்கு பின்னல் ஜனாதிபதியும். தயவு செய்து முஸ்லிம்களை நிம்மதியா இருக்க விடுங்க........

    Reply : 0       0

    xlntgson Tuesday, 24 August 2010 08:26 PM

    தேர்தல் முடிந்ததுமே கூட இதை நான் எதிர்பார்த்தேன். தமிழ் மிரருக்கு நன்றியுடன் கூகுல் எக்செலன்ஜீசன் என்று தேடல் செய்து பார்த்தால் தெரியும்! search xlntgson @ google or yahoo or any search machine.

    Reply : 0       0

    Pottuvilan Wednesday, 25 August 2010 05:55 AM

    முடிவு நல்ல முடிவாக இருக்க அல்லாஹ்வை இந்த புண்ணியம் நிறைந்த மாதத்தில் பிரார்த்திப்போம். அதே வேளை யாரும் ஆப்புவைக்காமல் பார்க்கவேண்டும் .

    Reply : 0       0

    sham Wednesday, 25 August 2010 06:22 AM

    அப்படினா மற்ற முஸ்லிம் அமைச்சர்கள் அழ தொடங்கிடுவாகளே .. என்ன நடக்குதுன்னு பார்போம்.

    Reply : 0       0

    m.i.samsudeen Wednesday, 25 August 2010 10:24 AM

    அப்ப தேர்தல் காலத்தில் மாகாண சபை உறுப்பினர்களான ஜவாத், மஜீத் ஆகியோர் கூறியவைகள் சரிதானே , ஜவாத் சொன்னால் பிழை ஹரீஸ் சொன்னால் சரி என கூறும் தலைமைத்துவம் முதலில் மாற்றப்பட வேண்டும். அரசுடன் இணைந்து எதையாவது முடித்து விட்டு விலகிவிடாமல் இருந்தால் போதும் .

    Reply : 0       0

    muhammad shabry Thursday, 26 August 2010 04:30 AM

    இப் பேச்சுவார்த்தையின் முடிவு என்ன என்பது பற்றி அறிய தரமுடியுமா???????????

    Reply : 0       0

    muhammad shabry Thursday, 26 August 2010 04:34 AM

    இப் பேச்சுவார்த்தையின் முடிவு என்ன என்பது பற்றி அறிய தரமுடியுமா???????????

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .