2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

அரசியலமைப்புத் திருத்தத்திற்கு முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவு

Super User   / 2010 ஓகஸ்ட் 27 , பி.ப. 01:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(றிப்தி அலி)

அரசியலமைப்பு திருத்தத்திற்காக அரசாங்கத்திற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவளிக்கும் என அக்கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

கட்சியின் தலைமையகமான தாருஸ்ஸலாமில் இன்று மாலை  நடைபெற்ற கட்சியின் அதியுயர் பீடக் குழுக் கூட்டத்தில் இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் கூறினார்.

இக்கூட்டத்தின் பின்னர் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் மேலும் கருத்துத் தெரிவித்த அவர்,  நாடாளுமன்றத்தில் மூன்றிலிரண்டு  பெரும்பான்மையை பெறுவதற்காக அரசாங்கத்திற்கு ஆதரவு அளிப்பதன் காரணமாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கும் எதிர்க் கட்சிகளின் கூட்டமைபிற்கு இடையிலான உறவில் எந்தவித பாதிப்பும் ஏற்பாடாது எனவும் தெரிவித்தார்.

அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் அனைத்து அபிவிருத்தித் திட்டங்களுக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பூரண ஆதரவையும் ஆலோசனையையும் வழங்கவிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன் ஜனாதிபதியின் பதவிக் காலத்தை மூன்றாவது தடவையாகவும் அதிகரிப்பதனால் முஸ்லிம் சமூகத்திற்கு எந்தவித பிரச்சினையும் இல்லை. அவ்வாறு ஏதாவது பிரச்சினைகள் ஏற்படும் பட்சத்தில் கலந்துரையாடி தீர்த்துக் கொள்ள முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன் "அரசாங்கம் 17ஆவது திருத்தச் சட்டத்திற்கு மாற்றீடாக கொண்டு வரவுள்ள சட்டத்திற்கும் எமது கட்சி ஆதரவு வழங்கவுள்ளது எனவும் தொடர்ந்தும் அரசாங்கத்திற்கு எமது கட்சியின் உதவி தேவைப்படும் பட்சத்தில் எமது கட்சியின் உயர்பீடம் கூடி தீர்மானம் எடுக்கும்.  நாங்கள் தொடர்ந்து எதிர்க்கட்சி வரிசையிலேயே இருப்போம் எனவும் "அவர் குறிப்பிட்டார்.

நிறைவேற்றதிகார ஜனாதிபதி பதவியை ஒருவர் மூன்று தடவைகள் வகிப்பதற்கேற்ப அரசியலமைப்புத் திருத்தம் செய்யப்படுவதற்கு முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவளிக்கும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .