2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

பேஸ்புக்கிற்கு எதிராக இலங்கையிலும் முறைப்பாடு

Suganthini Ratnam   / 2010 செப்டெம்பர் 15 , மு.ப. 06:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(இந்திக்க ஸ்ரீ அரவிந்த)

'பேஸ்புக்' இணையத்தளத்திற்கு எதிராக பல முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் கடந்த வாரம் அதிகாரிகள் 'பேஸ்புக்' இணையத்தள பாவனையாளர் ஒருவரின் 'பதிவை'  கண்டுபிடித்து தடை செய்ததாகவும் பெண்கள் மற்றும் சிறுவர் பிரிவின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

'பேஸ்புக்' இணையத்தளத்திற்கு எதிராக கடந்த வாரம் 4 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றதாகவும் டெய்லி மிரர் இணையத்தளத்திற்கு அவர் கூறினார்.

மேற்படி இணையத்தில் இலங்கைப் பெண்களின் படங்களை அவர்களது அனுமதியின்றி மாற்றம் செய்து சிலரால் வெளியிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இப்படங்கள் வேறு இணையத்தளங்களிலிருந்து தரவிறக்கம் செய்து அநாகரிகமான முறையில் மாற்றம் செய்து பேஸ்புக்கில் வெளியிடப்பட்டதாகவும் அந்த அதிகாரி தெரிவித்தார்.

இந்த வருட நடுப்பகுதியில் 'பேஸ்புக்' இணையத்தளத்திற்கு எதிராக சுமார் 50 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் பெண்கள் மற்றும் சிறுவர் பிரிவின் அதிகாரி கூறினார்.

மேற்படி நடவடிக்கைகளின் பின்னாலுள்ளவர்கள் பயன்படுத்தும் பிரத்தியேக ஐ.பி முகவரிகளை கண்டறிவது கடினமானது எனவும் ஆனால், தொலைத்தொடர்பு ஆணைக்குழுவின் உதவியுடன் இவர்களைக் கண்டுபிடிப்பதற்கு மாற்றுத் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது குறித்து கலந்துரையாடல்கள் இடம்பெறுவதாகவும் மேற்படி அதிகாரிகள் கூறினர். (DM)
 


You May Also Like

  Comments - 0

  • xlntgson Wednesday, 15 September 2010 09:31 PM

    இத்தோடு தண்ணீருக்கு அடியில் சென்று குளிக்கும் பெண்களுக்கு சேட்டை விட்ட செய்தியையும் பார்த்தால் காதலுக்கு தூது போக மீண்டும் அன்னப்பறவையும் புறா காலில் ஓலை கட்டி தூது விட வேண்டியது வரும் போலும் காதலருக்கு. தோழி தோழன் விடும் தூதும் இல்லாமல் போய்விட்டது. எஜமானி, சேவகி உறவு இன்மையினால். எஸ்.எம்.எஸ்சும் மிக மோசமான விமர்சனத்துக்காகி இருக்கிறது. கல்யாண தரகர்களையும் என்றும் நிராகரித்து விட்டனர். அக்கம் பக்கம், சொந்தம் சுற்றம் என்று உறவுகள் பலமானால் ஒழிய காதலுக்கு பஞ்சம் ஏற்படும்.இச்

    Reply : 0       0

    xlntgson Thursday, 16 September 2010 09:20 PM

    காதலுக்கு பஞ்சம் அல்லது ஸ்டார்வேசன் (sex starvation) நிலை மாற, ஆணும் பெண்ணும் படிக்கும் கல்லூரிகளையும் காதலிக்க உதவும் இணையதள வலையிடங்களையும் பரிந்துரைத்தனர். இப்போது ஒருவரது நிழற்படத்தை இன்னொருவர் பயன்படுத்தி செய்யும் மோசடிகளினால் இதுவும் நின்று போகும் இதனால் திருமணங்கள் தாமதப்படவும் திருமண விளம்பரங்களில் ஏமாறுவோரும் அதிகரிப்பர். கைவிரல் அடையாளம் போன்ற நிகழ்ச்சிகள் மனிதர் சிரிக்க பேச வேலைக்கு/விருந்துக்கு வீட்டுக்கு யாரையும் அழைக்க பயப்படும் நிலையில், பள்ளிக்கூட காதல் தடையாவது கொடுமை? மனவிகாரம்.

    Reply : 0       0

    xlntgson Friday, 17 September 2010 09:44 PM

    மன விகாரம் பெண்களுக்கு ஹிஸ்டீரியா hysteria நோயையும் ஆண்களுக்கு பலவிதமான மனஅழுத்தங்களையும் கொடுக்கும். உறவின் முறையை மதிக்காத உடலுறவுப் பழக்கங்கள் ஏற்படவும் கோழைத்தனமாக, வலது குறைந்தவர்களை இச்சைகளுக்கு பயன்படுத்திக்கொள்ள நினைப்பதும் வயோதிபர்களையும் பலாத்காரம் செய்வது அதிகரிக்கிறது. இதற்கு விபச்சாரம் பரிகாரம் ஆகாது. இலகு திருமண வழிமுறைகள் சீதன சிக்கல்கள் இல்லாத உள்ளதை கொண்டு நல்லதை அடையும் மனப்போக்கை கொண்ட இளவல்கள் உருவாக வேண்டும்! காதலுக்கு அழைப்பு தொழில் பெற்றதும் மேற்கொள்வது பெற்றோர் பொறுப்பு.

    Reply : 0       0

    srikant Saturday, 18 September 2010 09:55 PM

    முக்கியமாக பெண்பிள்ளைகள் தொழில் செய்து சம்பளத்தை அப்படியே கொண்டு வந்து பெற்றோர் கையில் கொடுக்கும் போது அவர்கள் அப்பெண்பிள்ளைகள் திருமணம் வேண்டாம் என்று கூறுவதாக முந்திக்கொண்டு கூறியே அவர்களது திருமண ஏற்பாடுகளை மும்முரமாக்குவதில்லை.காதலிக்கவும் தடை. பார்க்க சிரிக்க பேச தடை என்றால் கடிதம் கொடுக்க மரணஅடி கிடைக்கும். ஆதாரம் ஆகிவிடும் என்று இப்போது யாரும் கடிதவிடு தூது பயன்படுத்தவில்லை. எஸ் எம் எசும் அவ்வாறே.காதல் பைத்தியங்கள் கூடாதா, பின்னே? குலவிளக்கு என்னும் பழைய படம் - கேஎஸ்கோபாலகிருஷ்ணன் பாருங்கள்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .