2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

நிபுணர் குழுவின் பணி ஆரம்பம்

Suganthini Ratnam   / 2010 செப்டெம்பர் 17 , மு.ப. 06:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை விவகாரம் தொடர்பில் தமக்கு ஆலோசனை வழங்கும் நோக்கில்  ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூனினால் நியமிக்கப்பட்டுள்ள நிபுணர் குழுவானது தனது பணிகளை ஆரம்பித்துள்ளதாக  ஐ.நா.சபை இன்று அறிவித்துள்ளது.

ஐ. நா செயலாளர் நாயகம் நேற்று வியாழக்கிழமை  முதல்த் தடவையாக நிபுணர் குழுவை
 சந்தித்துள்ளதாகவும் ஐ.நா சபை தெரிவித்தது.

இந்த நிபுணர் குழுவானது அறிக்கையை சமர்ப்பிப்பதற்கு  4 மாத காலஅவகாசம்  வழங்கப்பட்டுள்ளது. நிபுணர் குழுவின் அறிக்கையை தான் எதிர்பார்த்திருப்பதாகவும் பான் கீ மூன் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இறுதிச் சமாதானமும் நல்லிணக்கமும் நிலை நாட்டப்பட வேண்டும்  எனவும் பான் கீ மூன் கூறினார்.

இந்த நிபுணர் குழுவுக்கு இலங்கை ஆட்சேபம் தெரிவித்துள்ள நிலையில், அடுத்த வாரம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் பான் கீ மூனுக்கும் இடையிலான சந்திப்பின்போது இவ்விவகாரம் கிளப்பப்படும் என டெய்லி மிரர் இணையத்தளத்திற்கு அரசாங்க வட்டாரங்கள் நேற்று தெரிவித்தன.(DM) 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .