2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

மாதத்திற்கு ஒரு தடவையே கணவரை பார்க்க அனுமதி: அனோமா பொன்சேகா

Super User   / 2010 ஒக்டோபர் 02 , மு.ப. 07:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(காந்த்ய சேனாநாயக்க)

விசேட கோரிக்கை விடுக்கப்பட்டால் தவிர, மாதத்திற்கு ஒரு தடவையே தனது கணவரை தான் பார்க்கச் செல்ல முடியும் என அனோமா பொன்சேகா தெரிவித்துள்ளார்.

எனினும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் சட்டத்தரணிகளும் வெலிக்கடை சிறையிலுள்ள சரத் பொன்சேகாவை வழக்கம்போல் சென்று பார்வையிடுகின்றனர் எனவும் அவர் தெரிவித்தார்.

அதேவேளை, ஏனைய சிறைக் கைதிகளைப் போலவே சரத் பொன்சேகாவும் சிறையில் காலை உணவாக சோறும் தேங்காய் சம்பலுமே உண்பதாக அனோமா பொன்சேகா உறுதிப்படுத்தினார். சரத் பொன்சேகாவின் மருத்துவ நிலைமை தொடர்பாக விசேட கோரிக்கைகள் எதுவும் விடுக்கப்படவில்லை எனவும் அவர் கூறினார்.

அப்பாவியான தனது கணவருக்கு எதிராக இராணுவ நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவரின் விடுதலைக்காக மேலும் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அனோமா பொன்சேகா தெரிவித்துள்ளார்.
 


You May Also Like

  Comments - 0

  • sumaiyya Saturday, 02 October 2010 07:06 PM

    கவலை வேண்டாம் நீ சோறு சாப்பிடுகின்றாய் ! ! !
    ஆனால் நெருப்பை உண்டவன் விரைவில் அதை கக்கதான்
    போகிறான். அந்த நாளில் அவன் நிலை என்னவோ ? ? ?
    இது சத்தியம் உண்மை என்றும் அழியாது நீ கவலைப் படாதே...
    சுமையா மன்சூர் (மல்வானை )

    Reply : 0       0

    ajan Saturday, 02 October 2010 07:21 PM

    செய்தவற்றுக்கு தண்டனை .

    Reply : 0       0

    xlntgson Saturday, 02 October 2010 09:36 PM

    அரசியல் எப்போதும் ஒரே மாதிரி தான் பொன்சேகா வந்திருந்தால் இன்னும் மோசமாக இருந்திருக்கலாம். இராணுவம் புரியும் அட்டூழியங்களை சுட்டிக்காட்டிய பாகிஸ்தான் அமைச்சர் ஒருவர் விலக வேண்டியது வந்தது. அவர் கூறுகிறார்: நாங்கள் தேச பாதுகாப்புக்கு இராணுவம் வைத்திருக்கிறோமே தவிர, தலைவர்களை கொல்ல அல்ல என்று. கண்ணீர் அரசியல் தொடரலாம். ஆனால் நடந்தவற்றுக்கு நான் வருந்துகின்றேன். தளபதிகள் அரசியலில் இறங்கக்கூடாது என்று கூறினால் இவருக்கு என்ன கெட்டு விடும்? வயதுபோன அரசியல்வாதிகள் இவரை பயன்படுத்திக்கொண்டனர் இவர் ஏன் முரண்டு?

    Reply : 0       0

    wasantha kumar david Saturday, 02 October 2010 10:53 PM

    முன்பு அரசன் அன்று கொள்வான் தெய்வம் நின்று கொள்ளும் என்று சொன்னம் . ஆனால் இப்போது தெய்வமும் உடனடியாக தண்டனை வழங்குகேன்றது
    செய்தாருக்கு செய்த பலன்.
    -வசந்த குமார் டேவிட், மட்டக்குளிய, கொழும்பு


    Reply : 0       0

    xlntgson Tuesday, 05 October 2010 08:28 PM

    பெரும்துன்பங்களை உடம்பில் வெடிகுண்டின் துகள்களை தாங்கி அனுபவித்தவருக்கு சிறை வாசம் பெரிதல்லவாம். அவரே கூறுகின்றார். அவரது பட்டம் பறிப்பும் ஓய்வூதிய இழப்பும் மன நோவினை ஆகும். ஓய்வூதியத்தை ஏன் பறித்தார்கள் என்றும் விளங்கவில்லை. அனுமதியின் பேரில் தானே ஓய்வு பெற்றார்? பெரிய இடத்து சமாச்சாரம், நான் சட்ட வல்லுனனும் அல்லன். நினைக்கிறேன், அவ்வளவுதான்! பொன்சேகா சுயேட்சையாக செயல்படவில்லை.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .