2024 மே 09, வியாழக்கிழமை

ரிஸானாவின் மரண தண்டனையை நிறுத்துமாறு மன்னிப்புச்சபை வலியுறுத்து

Suganthini Ratnam   / 2010 ஒக்டோபர் 28 , மு.ப. 06:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இலங்கை பணிப்பெண்ணான ரிஸானா நபீக்கிற்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனை நிறைவேற்றத்தை நிறுத்திவைக்குமாறு சவூதி அரேபிய அரசாங்கத்திடம், சர்வதேச மன்னிப்புச்சபை கோரிக்கை விடுத்துள்ளது.

ரிஸானா நபீக் 17 வயதாக இருக்கும்போது, சவூதி அரேபியாவில்; குழந்தையொன்றை கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கடந்த 2005ஆம் ஆண்டு மே மாதம் கைதுசெய்;யப்பட்டார்.  

சவூதி அரேபிய மன்னர் அப்துல்லாவின் இறுதி முடிவிற்காக இந்த ரிஸானா நபீக்கிற்கு எதிரான வழக்கு தாமதப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கிடையில், ரிஸானா நபீக்கிற்கு கருணை காட்டுமாறு கோரி இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஏற்கெனவே சவூதி அரேபிய அரசாங்கத்திற்கு கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார்.

ரிஸானா நபீக் கடந்த 2005ஆம் ஆண்டு மே மாதம் சவூதி அரேபியாவிற்கு பணிப்பெண்ணாகச் சென்றிருந்தபோது, அவரது கடவூச்சீட்டில் 1982ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் றிஸானா நபீக் பிறந்துள்ளார்   என குறிப்பிடப்பட்டிருந்தது.

அவரது பிறப்புச் சான்றிதழிலில் 1988ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் ரிஸானா நபீக் பிறந்துள்ளார்   என குறிப்பிடப்பட்டிருந்ததுடன், அப்போது அவரது உண்மையான வயது 17 ஆகும்.

இந்நிலையில், ரிஸானா நபீக்கிற்கு  17 வயதாக இருக்கும்போதே, அவர் சவூதி அரேபியாவில்; குழந்தையை கொலை செய்ததாக தெரிவிக்கப்படுகிறது.

ஆரம்பகட்ட விசாரணைகளின்போது, அவர் சட்டத்தரணியின் உதவியைப் பெற முடியவில்லை. அவ்வேளையில் தான் தாக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார். ஆரம்பத்தில் கொலைக் குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டபோதிலும், தான் தாக்கப்பட்டு குற்றத்தை ஒப்புக்கொள்ளுமாறு நிர்ப்பந்திக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X