2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

ஜனாதிபதியை சந்திக்க தமிழ் கட்சிகளின் அரங்கம் தீர்மானம் - எம்.கே.சிவாஜிலிங்கம்

Menaka Mookandi   / 2010 நவம்பர் 03 , மு.ப. 09:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(றிப்தி அலி)

எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்திப்பதற்கு தமிழ்க் கட்சிகளின் அரங்கம் தீர்மானித்துள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தமிழ்மிரர் இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.

தமிழ்க் கட்சிகளின் அரங்கத்தின் கூட்டம் இன்று காலை கொழும்பிலுள்ள ஈ.பி.டி.பி. அலுவலகத்தில் இடம்பெற்ற போது மேற்படி தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக அவர் கூறினார்.

தமிழ் மக்கள் தற்போது எதிர்நோக்குகின்ற அன்றாட பிரச்சினைகளான மீள்குடியேற்றம்இ காணிஇ அரசியல் கைதிகள் விடுதலை மற்றும் போர் கைதிகள் விடுதலை தொடர்பான மகஜரொன்றை தயாரித்து ஜனாதிபதியுடனான சந்திப்பில் கையளிக்கவுள்ளதாகவும் சிவாஜிலிங்கம் குறிப்பிட்டார்.

எதிர்வரும் நவம்பர் 13ஆம்இ 14ஆம் திகதிகளில் தமிழ்க் கட்சிகளின் அரங்கம் கொழும்பில் சந்தித்து ஜனாதிபதிக்கு கையளிக்கவுள்ள மகஜரை தயாரிக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தமிழ்க் கட்சிகளின் அரங்கத்தின் இன்றைய சந்திப்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் ஈ.பி.டி.பி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தலைமையில் தமிழ் மக்கள் விடுதலை முன்னணி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆனந்த சங்கரி தலைமையில் தமிழர் விடுதலைக் கூட்டணி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டி.சித்தார்த்தன் தலைமையில் புளொட், மேல் மாகாண சபை உறுப்பினர் கலாநிதி குமரகுருபரன் தலைமையில் ஜனநாயக மக்கள் முன்னணி, தந்தை செல்வாவின் மகன் சந்திரஹாசன் தலைமையில் ஒபர்இஸ்ரீடெலோ பிரதிநிதிகள், பொதுச்செயலாளர் ஸ்ரீதரன் தலைமையில் ஈ.பி.ஆர்.எல்.எப். ஆகியவற்றின் பிரதிநிதிகள் இன்றைய கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி இன்றைய கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .