2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

இலங்கைத் தமிழர்கள் சுவிஸில் ஆர்ப்பாட்டம்

Super User   / 2011 ஏப்ரல் 03 , மு.ப. 09:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

சுவிட்ஸர்லாந்திலிருந்து இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படுவதற்கு எதிராக நூற்றுக்கணக்கான இலங்கையர்கள் சுவிட்ஸர்லாந்து தலைநகர் பேர்னில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இலங்கையில் மனித உரிமை நிலைமைகள் மோசமாகவுள்ளதால் அரசியல் தஞ்சம் மறுக்கப்பட்டர்களை திருப்பி அனுப்பும் தீர்மானத்தை மறுபரிசீலனை செய்யுமாறு அவர்கள் கோரினர்.

யுத்தத்தின் பின்னர் இலங்கையில் நிலைமை முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால் அரசியல் தஞ்சம் கோருவோர் வடக்கு கிழக்கு பிராந்தியங்களுக்கு திரும்பிச் செல்லலாம் என சுவிட்ஸர்லாந்தின் சமஷ்டி குடிவரவு அலுவலகம் இவ்வருட முற்பகுதியில் தெரிவித்தது.

எனினும் தமிழர்கள் இலங்கைக்கு திரும்பினால் கைது செய்யப்பட்டு சித்திரவதைக்குட்படுத்தப்படுவர் என ஈழத் தமிழர்களின் சுவிட்ஸர்லாந்து கவுன்ஸில் கூறுகிறது.

போர் குற்றச்சாட்டுகள் குறித்த சர்வதேச விசாரணையை இலங்கை அரசாங்கம் ஏற்றுக்கொண்டு, அவசரகால சட்டத்தை நீக்கினால் மாத்திரமே அகதிகள் திருப்பி அனுப்பப்பட வேண்டும் என அவர்கள் தெரிவத்துள்ளனர்.

கடந்த வருட இறுதியில் 2100 இலங்கை அகதிகளின் அரசியல் தஞ்ச கோரிக்கை விண்ணப்பங்கள் பரிசீலனையில் இருந்ததாக சுவிட்ஸர்லாந்து சமஷ்டி குடிவரவு அலுவலகம் தெரிவித்திருந்தது.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .