2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

கொழும்பு –தூத்துக்குடி கப்பல் சேவையை ரத்துச் செய்யவேண்டும்: ஜெயலிதா

Super User   / 2011 ஜூன் 14 , மு.ப. 10:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கொழும்புக்கும் தூத்துக்குடிக்கும் இடையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள கப்பல் சேவையை நிறுத்த வேண்டுமென தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா கூறியுள்ளார்.

கொழும்பு  - தூத்துக்குடி கப்பல் சேவை 28 வருடங்களின்பின் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நேற்று தூத்துக்குடியிலிருந்து புறப்பட்ட கப்பல் இன்று காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.

 இந்நிலையில் மேற்படி கப்பல் சேவையை நிறுத்த வேண்டுமென இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கிடம் ஜெயலலிதா, இன்று செவ்வாய்க்கிழமை சந்தித்த சமர்ப்பித்த மனுவில் தெரிவித்துள்ளார். இக்கப்பல் சேவை தொடர்பாக தனது அரசாங்கத்துடன் கலந்தாலோசனை நடப்படவில்லை என ஜெயலிதா தெரிவித்துள்ளார்.

"இலங்கையில் தமிழர்கள் சம உரிமை பெற்று வாழவும், முகாம்களில் வசிக்கும் தமிழர்கள் உடனடியாக மறு குடியேற்றம் செய்யப்படவும் மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கை மீது பொருளாதாரத் தடையை ஏற்படுத்த பிற நாடுகளுடன் இணைந்து இந்தியா முயற்சி எடுக்க வேண்டும் என  தமிழக சட்டசபை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

இத்தீர்மானத்தை தமிழக மக்கள் பெரிதும் ஆதரித்துள்ளனர். இந் நிலையில், தமிழக அரசுடன் கலந்தாலோசிக்காமல் மிகத் தவறான நேரத்தில் இந்த கப்பல் சேவை தொடங்கப்பட்டுள்ளது. அதை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்"என அம்மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 


You May Also Like

  Comments - 0

  • raheem Tuesday, 14 June 2011 10:58 PM

    அம்மா தாயே தமிழர்களின் வாயில் மண்ணள்ளி போட்டுடதே! ஆடு நனையுதென்று ஓநாய் அழுத கதை தான் இது....

    Reply : 0       0

    ajan Tuesday, 14 June 2011 10:59 PM

    நல்ல விடயம். உண்மையை மறைக்க எல்லா நாடகமும் லங்காவில் நடக்கும் நம்பிவிட வேண்டாம்.
    தொடர்ந்து ஒலிக்கட்டும் குரல்.
    நன்றி. வாழ்த்துக்கள்

    Reply : 0       0

    Fahim Wednesday, 15 June 2011 12:33 AM

    கொழும்பு-தூத்துக்குடி பயணிகள் கப்பல் சேவையினால் வணிகம் பெருகும், தமிழர் வாழ்வு தழைக்கும் என்றல்லவா கருதப்படுகிறது? இதை நிறுத்துவதால் பாதிக்கப்படப்போவது தென் தமிழகத்தாரும் கூடவன்றோ. சுயநல அரசியல் வேண்டாமே.

    Reply : 0       0

    Jeewan Wednesday, 15 June 2011 01:02 AM

    இது ஜெயாவின் உத்தேச பொருளாதார தடையின் ஒரு பகுதியா?

    Reply : 0       0

    nawas mohammed Wednesday, 15 June 2011 01:23 AM

    இவர் வந்தாலே இப்படி குண்டக்கா மண்டக்கை அரசியல் நாடகம் தான் ஆடுவார் .இன்னும் ஐந்து வருடம் இவர்
    ஆட்சி. பாவம் தமிழக மக்களை வாட்டி எடுப்பார்.

    Reply : 0       0

    Kajan Wednesday, 15 June 2011 02:13 AM

    அம்மா மூலிகை வைத்தியம் எடுத்தால் எல்லாம் சரியாகும்.

    Reply : 0       0

    shan Wednesday, 15 June 2011 08:57 AM

    கப்பலை நிறுத்துவதால் தமிழனுக்கு உதவமுடியுமா ? மேடம் இப்போது தான் அனேகமான தமிழன் நிம்மதியா வாழ்ந்து கொண்டு இருக்கிறான் மறக்க வேண்டாம் .இது உங்கள் அரசியல் ?

    Reply : 0       0

    mafas Wednesday, 15 June 2011 06:25 PM

    உண்மையில் இந்த கப்பல் சேவையில் அதிகம் நன்மை பெறுவது தமிழ் மக்கள் மற்றும் முஸ்லிம் மக்களுமே இதை தடுக்க முயற்சி செய்வது ரொம்ப கண்டிக்கத்தக்க விடயம் ஆகும்.

    Reply : 0       0

    xlntgson 0776994341;0716597735 sms only Wednesday, 15 June 2011 09:15 PM

    எப்படியாவது இதை தடுக்க இயலாதா என்று என்னும் பேரினவாதிகளுக்கு இது மகிழ்ச்சியைத் தரும்!

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .