2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

கிழக்கு மாகாண ஆசிரியர் இடமாற்றத்தை இடைநிறுத்த ஜனாதிபதி உத்தரவு

Super User   / 2011 ஜூன் 20 , பி.ப. 02:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

(றிப்தி அலி)

சர்ச்சைக்குரிய கிழக்கு மாகாண ஆசிரியர் இடமாற்றத்தை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு கிழக்கு மாகாண ஆளுநர் ரியர் அட்மிரல் மொஹான் விஜயவிக்ரமவிற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் சற்று முன்னர் தமிழ்மிரர் இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.

அரச தரப்பு நாடாளுமன்ற குழுக் கூட்டம் இன்று திங்கட்கிழமை மாலை இடம்பெற்ற போது இந்த இடமாற்றத்தை உடனடியாக இடைநிறுத்துமாறு அரச தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான ஏ.எல்.எம்.அதாவுல்லா, விஜித் விஜிதமுனி சொய்சா, விநாயகமூர்த்தி முரளிதரன், எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா எச்.எம்.எம்.ஹரீஸ் பைசால் காசீம் மற்றும் ஏ.எச்.எம்.அஸ்வர் ஆகியோர் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்தனர்.

இதனையடுத்து, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தொலைபேசி மூலம் கிழக்கு மாகாண ஆளுநர் மொஹான் விஜயவிக்ரமவை தொடர்புகொண்டு இந்த இடமாற்றத்தை டிசெம்பர் மாதம் வரை தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

ஜனாதிபதியின் இந்த உத்தரவையடுத்து கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் மற்றும் மாகாண கல்வி பணிப்பாளர் எம்.ரீ.ஏ.நிசாம் ஆகியோருக்கு இந்த இடமாற்றத்தை நிறுத்துமாறும் மாகாண ஆளுநர் பணித்துள்ளார்.

முன்னதாக, கிழக்கு மாகாண ஆளுநர் ரியர் அட்மிரல் மொஹான் விஜயவிக்ரமவிற்கும் ஆசிரியர் தொழிற் சங்கங்களுக்கும் இடையில் மாகாண ஆசிரியர் இடமாற்ற தொடர்பில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் நிறைவடைந்தமை குறிப்பிட்டத்தக்கது.

இந்நிலையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்த இடமாற்றத்தை இடைநிறுத்துமாறு உத்தரவிட்டுள்ளார். இந்த இடமாற்றத்தை கண்டித்து நாளை செவ்வாய்க்கிழமை கிழக்கு மாகாண சபையில் கண்டன பிரேரணை கொண்டுவரப்படவிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

கிழக்கு மாகாணத்தை சேர்ந்த சுமார் 2,000 ஆசிரியர்கள் வலயதுக்குட்பட்ட மற்றும் வலயத்திற்கு அப்பாற்பட்ட ஆகிய இரண்டு பிரிகளில் இடம்செய்யப்பட்டிருந்தனர்.

இந்த இடமாற்றத்தை கண்டித்து கடந்த வாரம் அம்பாறை மாவட்டத்தின் பல பாடசலைகளில் மாணவர் வரவு குறைவாக காணப்பட்டதுடன் வலய கல்லி காரியாலயத்திற்கு முன்னால் இவர்கள் ஆர்பாட்டத்திலும் ஈடுபட்டனர்


You May Also Like

  Comments - 0

  • majeed Tuesday, 21 June 2011 04:34 AM

    கல்முனை ஆசிரியர் சமூகம் என்றென்றும் ஹரீஸ் எம்பிக்கு நன்றி உடையவர்களாக இருக்க வேண்டும் . நன்றி உங்கள் முயற்சிகளுக்கு
    எம்பி அவர்களே !

    Reply : 0       0

    Sulaiman Raafi Tuesday, 21 June 2011 05:07 AM

    வாழ்க நமது அரசியல் தலைகள்.

    Reply : 0       0

    Parent Tuesday, 21 June 2011 05:31 AM

    நன்றி, இன்னுமொரு முட்டாள்தனமான முடிவு. இன்னும் அதிகமான ஆசிரியர்களை சேர்த்து அனுப்பபோகிறார்.
    அன்பிற்குரிய ஆசிரியர்களே தயவுசெய்து எங்களுடைய பிள்ளைகளுக்கு ஒழுக்கம் என்றால் என்ன என்று மட்டும் நீங்கள் கேட்க வேண்டாம்.

    Reply : 0       0

    Xray Tuesday, 21 June 2011 11:48 AM

    கல்வி உத்தியோகத்தர்களை வேலை செய்ய விடாமல் அரசியல் வேலை செய்யக்கூடாது. குறித்த இடத்தில் பிறந்து அங்கேயே டிகிரி முடித்து அங்கேயே தொழில் பர்த்தல்தனே உலகமும் தெரியாது ஹரிஸ், பைசல், அதாஉல்லாஹ் போன்றோரின் தலைமைகளை ஏற்றுக்கொள்ள முடியும். இது இவர்கள் இந்த சமூகத்திற்கு செய்த துரோகம்.

    Reply : 0       0

    Ahamed Junaid Tuesday, 21 June 2011 01:14 PM

    டிசம்பர் மாதத்தில் எப்படியான போராட்டத்தை மாணவர்களை எடுத்து கொண்டு செயலாம், டயர்களை எங்கு எரிக்க வைக்கலாம் என்று அன்பிற்குரிய ஆசிரியர்களே இனியாவது சிந்தித்து விடாதீர்கள். ஜனவரி மாதத்தில் இருந்தாவது பாதிக்கப் பட்டிருக்கும் மாணவர்களுக்கு படிப்பிக்க மனதில் இடம் கொடுங்கள் .

    Reply : 0       0

    paddiruppu Tuesday, 21 June 2011 02:21 PM

    பட்டிருப்பு ஆசிரியர்கள் எமது அரசியல்வாதிகளுக்கு நன்றி தெரிவிக்கின்றனர்.

    Reply : 0       0

    Pasha Tuesday, 21 June 2011 02:49 PM

    மக்களால் தெரிவு செய்யப்பட்ட முதலமைச்சரைவிட ஆளுநருக்கு அதிகாரம் கூடுதலாக உள்ளது. சில அரசியல்வாதிகள் தங்களது வாக்குகளை தக்க வைக்க இந்த நாடகம். பாதிக்கப்படுவது பின் தங்கிய இடது பிள்ளைகளின் கல்வி தான்.

    Reply : 0       0

    Raja Tuesday, 21 June 2011 04:54 PM

    எனவே பிள்ளையானின் பேச்சு சிறுபிள்ளதனமா போச்சு.

    Reply : 0       0

    மிதுனன் Wednesday, 22 June 2011 05:00 AM

    உண்மை இன்றைய அனைத்து அரசாங்க ஊழியர்களின் பிரச்சினை வாழ்க்கை செலவை ஓட்டுவதற்கு தேவையான ஊதியம் இல்லை என்பதுதான். போதிய அளவு ஊதியம் அவர்களுக்கு கிடைக்குமிடத்து பெரும்பாலான ஆசிரியர் எவ்விடத்திற்கும் சென்று பணியாற்றத் தயாராய் இருப்பார்கள்.

    Reply : 0       0

    மிதுனன் Wednesday, 22 June 2011 05:02 AM

    இன்று வழங்கப்படும் கஸ்ரஇ அதிகஸ்ர படிகளை இவ்வாறு குடும்பங்களை பிரிந்து வெளிவலயங்களுக்கு சென்று வேலை செய்யும் ஆசிரியர்களுக்கு வழங்கினால் அவர்கள் நிச்சயம் மனநிறைவுடன் வேலை செய்வார்கள். ஆசிரியர்களுக்கு என்ன சலுகை விலையிலா பெhருட்கள் விற்கின்றார்கள். ஆசிரியர்களுக்கும் குடும்பங்கள் உண்டு. அவர்களுக்கும் வயிறு உண்டு. ஏனைய அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு கி்டைப்பது போல் ஓவர் டைம் கிடைப்பதில்லையே?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .