2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

ஜே.வி.பி.க்குள் பிரச்சினை இல்லை: சோமவன்ஸ அமரசிங்க

A.P.Mathan   / 2011 செப்டெம்பர் 22 , மு.ப. 02:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மக்கள் விடுதலை முன்னணி முன்னை போன்றே செயற்படுகிறது. இக்கட்சிக்குள் பேசுவதுபோன்று எந்தவிதமான குழப்பமும் இல்லை. வதந்திகளுக்கு பதில்சொல்லவேண்டிய அவசியமும் எனக்கில்லை. நாங்கள் இப்பொழுது உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் தொடர்பில் கவனம் செலுத்திவருவதால் இப்படியான வதந்திகளை நாங்கள் பெரிதுபடுத்தவில்லை என அக்கட்சியின் தலைவர் சோமவன்ஸ அமரசிங்க தெரிவித்தார்.

ஜே.வி.பி.க்குள் குழப்பம் உருவாகியிருப்பதாக வெளிவந்த செய்திகள் தொடர்பில் சோமவன்ஸ அமரசிங்கவிடம் கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இச்செய்தி தொடர்பாக மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வாவிடம் கேட்டபோது...

கட்சிக்குள் உருவாகியிருக்கின்ற சதி முயற்சிகளுக்கு நாங்கள் ஒருபோதும் கையசைத்துப் போகப்போவதில்லை. இவ்விடயம் தொடர்பில் முன்னையை விட கூடிய கவனத்தினைச் செலுத்தி பிரச்சினைகளை களையவிருக்கிறோம். கட்சியினை புதிய சக்தியுடன் வலுவடையச் செய்து நாட்டில் ஜனநாயகத்தையும் நீதியையும் நிலைநாட்டுவது பற்றி கூடிய கவனம் செலுத்தவிருக்கிறோம் என்று குறிப்பிட்டார்.

கட்சி அங்கத்தவர்களுக்குள் ஏதாவது குழப்பம் நிலவினால் அதனை உரியமுறையில் தீர்த்து வைத்து மக்கள் முன்னணியை சக்திமிக்க கட்சியாக உருவாக்கி நாட்டினை கட்டியெழுப்புவதே எங்களது குறிக்கோள் எனவும் ரில்வின் சில்வா மேலும் தெரிவித்தார்.

1987 காலப்பகுதியில் கொலைசெய்யப்பட்ட மக்கள் விடுதலை முன்னணியின் சிரேஷ்ட உறுப்பினர் ரஞ்சிதத்தின் சகோதரரான பிரேமகுமார் குணரத்தினம் தலைமையில் புதிய ஜே.வி.பி. உருவாகி வருகிறது என்ற செய்தி அண்மையில் வெளிவந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. (Sandun A Jayasekera)


You May Also Like

  Comments - 0

  • siraj Thursday, 22 September 2011 07:00 PM

    நாங்க நம்பிட்டோமுங்கோ. நீங்க நல்ல ஒற்றுமைதானுங்கோ.

    Reply : 0       0

    xlntgson Thursday, 22 September 2011 09:15 PM

    பழைய jvp ஆஸ்திரேலியாவில் இருந்து வந்த குணரத்தினம் எங்கே, அவர் செய்தியாளர்களை அழைத்து சொல்வாரா, இப்படி?

    Reply : 0       0

    bis Thursday, 22 September 2011 10:09 PM

    ஆமா ஆமா உள்ளே பிரச்சினை இல்லைதான். அது வீதிக்கு வந்து விட்டது.....

    Reply : 0       0

    meenavan Thursday, 22 September 2011 11:20 PM

    தலைவர் சோமவன்ச அவர்களே? கட்சியை கலைத்தால் என்ன? பிரச்சினை எல்லாம் சுமுகமாகிவிடும்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .