2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

இந்திய ரயில் என்ஜின்களை இயக்க இலங்கை ரயில் சாரதிகள் மறுப்பு

Super User   / 2011 செப்டெம்பர் 26 , மு.ப. 11:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(சந்துன் ஏ ஜயசேகர)

அண்மையில் இறக்குமதி செய்யப்பட்ட இந்திய ரயில் என்ஜின்களை இயக்குவதிலிருந்து தாம் வாபஸ் பெறவுள்ளதாக ரயில்வே என்ஜின் சாரதிகள் அறிவித்துள்ளனர்.

அண்மையில் அளவ்வையில் ஏற்பட்ட ரயில் விபத்துக்கான ரயில் சாரதிகளின் மீது சுமத்த  ரயில்வே திணைக்கள அதிகாரிகள் சிலர் முற்படுவதாகவும் ஆனால் இந்த ரயில் என்ஜின்களின் தொழில்நுட்ப கோளாறு காரணமாகவே இவ்விபத்து ஏற்பட்டதெனவும் ரயில்வே சாரதிகள் கூறுகின்றனர்.

. இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடைபெறுவதாகவும்  ரயில்வே பொறியியலாளர்களின் சங்கம் தெரிவித்துள்ளது.
 


You May Also Like

  Comments - 0

  • hamza Monday, 26 September 2011 10:53 PM

    ஆட தெரியாதவன் அரங்கு கோணல் என்றானாம் .....

    Reply : 0       0

    Thowfeek Monday, 26 September 2011 11:29 PM

    அரங்கு கோணல் என்றாலும் ஆடுவது கஷ்டம்தான்

    Reply : 0       0

    prevo Tuesday, 27 September 2011 02:43 AM

    Indian railway is fourth largest railway in the world and successfully running all these years, daily it carrying 30 million people. In India most of the accident happeing due human error, there is no meaning in telling technical problem in engine.

    Reply : 0       0

    Ram Tuesday, 27 September 2011 04:51 AM

    இந்தியாவில் எத்தனை ரயில்கள் பயணிக்கின்றன? எந்த நாளும் விபத்தா நடக்கிறது? இந்திய தயாரிப்புகள் என்றால் கொஞ்சம் மட்டமான நோக்கம்தான் இங்குள்ளவர்களுக்கு. ஹம்சாவின் கருத்து சரியே.

    Reply : 0       0

    Hannan Tuesday, 27 September 2011 12:55 PM

    சம்பளத்தில் பத்து ரூபா கூட்டினால் எஞ்சின் சும்மாவே இயங்கும்.

    Reply : 0       0

    hamaza Tuesday, 27 September 2011 03:42 PM

    டீசல் வண்டியை பாவித்தவங்களுக்கு electric வண்டியை கண்டவுடன் பயந்து விட்டார்களோ என்னவோ...

    Reply : 0       0

    xlntgson Tuesday, 27 September 2011 09:26 PM

    இந்தியாவில் இருந்து தருவிக்காமல் அதிக செலவுடன் வேறு ஏதாவது நாட்டிலிருந்து தருவித்தால் தான் ஓட்டுவார்களாக இருக்கும்! மருந்துகளைப் போல், இந்தியாவில் இருந்து தருவிக்கப்படும் generic தரமான ஆனால் விலை குறைந்த மருந்துகளை உயிர்கொல்லிகள் என்று கூறி அதைப் போல் பல்லாயிரம் மடங்கு அதிக விலை மருந்துகளை அமெ, ஐரோ நாடுகளில் நின்றும் தருவித்தால் அதை பயன்படுத்துவோம் என்று கூறும் தேச பக்த மருந்தாளர்கள்! இதை சுகாதார அமைச்சரே கூறி இருக்கிறார் காண்க. தரக்குறைவு எல்லா நாட்டிலும் உண்டு எல்லா கம்பனிகளும் தரம் குறைவல்ல!

    Reply : 0       0

    zamroodh Wednesday, 28 September 2011 04:22 AM

    நீங்கள் சொல்வதெல்லாம் சரிதான் ஆனாலும் அதிகமாக ரயில் விபத்தும் என்ஜின் கோளாரும் இடம்பெறும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்பதை மறக்க வேண்டாம்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .