2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

ஜே.வி.பி. சீர்திருந்திய மார்க்ஸிஸ்ட் கட்சி: அமெரிக்காவிடம் கூறிய சோமாவன்ஸ

Kogilavani   / 2011 செப்டெம்பர் 30 , மு.ப. 10:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்க தூதுவர் பற்றீஸியா புட்டெனிஸுடன் பேசும்போது, ஜே.வி.வி. ஒரு சீர்திருத்திய மார்க்ஸிஸ்ட் கட்சி என 2009இல் சோமாவன்ஸ அமரசிங்க கூறியதாக அமெரிக்க தூதுவராலயம் அனுப்பிய இரகசிய கேபிள் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி 15 இல் சோமாவன்ஸ அமரசிங்க, சுனில் ஹந்துன்நெத்தி ஆகியோர், அமெரிக்க தூதுவருடன் பேசிய போது ஜே.வி.பி.யின் கருத்தில் உள்ள பல்லின, பல்மொழி, இலங்கை ஜனாதிபதி தேர்தலில் சரத்பொன்சேகாவை ஆதரித்தல், இலங்கையின் உள்விவகாரங்களில் வெளிநாடுகளின் தலையீடு ஆகிய விடயங்கள் பேசப்பட்டன என கேபிள் தெரிவித்தது.

இந்த பேச்சு விபரங்களை புட்டெனிஸ் 'இரகசியமானது' என வகைப்படுத்தினார். இந்த சந்திப்பின்போது ஜே.வி.பி. ஒரு சீர்த்திருத்திய மார்க்ஸிஸ்ட் கட்சி என குறிப்பிட்ட சோமவன்ச, ஜே.வி.பி. சகலரும் சமமானவர்கள் என்னும் கொள்கையுடையது என்றும் தமது கட்சி ஒரு தேசியவாத கட்சி அல்ல எனவும் ஒரு தமிழ் பிரதமர் நியமிக்கப்படுவதை தமது கட்சி விரும்புவதாகவும் கூறினார்.

ஜே.வி.பி. ஜனாதிபதி தேர்தலில் சரத்பொன்சேகாவை ஆதரித்தமைக்கு, சோமவன்ஸ  ஏழு காரணங்களை கூறினார் என தற்போது கசிந்துள்ள கேபிளில் கூறப்பட்டுள்ளது.

எந்தவொரு யுத்தத்திலும் மனித உரிமை மீறல்கள் காணப்படும் என்றும் இலங்கையில் நடந்த யுத்தத்தில் இது மிகவும் குறைவாக இருந்ததாகவும் அவர் கூறியுள்ளார் என கேபிளில் காணப்படுகிறது.

இவர் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை ஆதரிப்பதாகவும் யுத்த குற்ற ஆணைக்குழுவை ஆதரிக்கவில்லை எனவும் கூறியதாக மேற்படி கேபிளில் கூறப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .