2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

'சம வாய்ப்பு இருக்கும் வகையில் சட்டக் கல்லூரி நுழைவுப் பரீட்சை'

Super User   / 2013 பெப்ரவரி 15 , மு.ப. 12:07 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஒலிந்தி ஜயசுந்தர


எந்த மொழியில் பரீட்சை எழுதினாலும் சம வாய்ப்பு இருக்கும் வகையில் சட்டக் கல்லூரி நுழைவுப் பரீட்சை வினாத்தாள்கள் தயாரிக்கப்படும் என நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் உறுதியளித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, நீதி அமைச்சின் செயலாளர் கமலினி டி சில்வா, ஜனாதிபதியின் ஆலோசகர் சுமித் விஜேசிங்க, சட்டவுரைஞர்கள் கலந்துகொண்ட இந்த கூட்டத்தில், இந்த பரீட்சை எழுதுவோருக்கு பரீட்சை எழுதும் மொழி தடையாகாத வண்ணம் வினாத்தாள்கள் தயாரிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

இந்த பரீட்சைக்கு தோற்றிய மாணவர்கள் முகங்கொடுத்த வேறு பிரச்சினைகளும் தீர்த்துக்வைக்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.

புதிய முறையிலான பரீட்சை கிராமப் புற மாணவர்களுக்கான வாய்ப்புக்களை  குறைத்துவிட்டது என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் ஹக்கீம்,

"பரீட்சை வித்தியாசமாக அமையும் என்பது எனக்கு தெரியாது. இது தொடர்பில் நான் நடவடிக்கை எடுப்பேன். இது தொடர்பில் சட்டக் கல்வி மன்றத்துடன் கலந்துரையாடி சாதகமான தீர்வொன்றை பெற்றுத்தருவேன். சட்டக் கல்லூரி நுழைவுத் தேர்வுக்கான பரீட்சை முறையில் மாற்றம் செய்வதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்பட்ட காரணத்தினால் மாணவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக நீங்கள் சுட்டிக்காட்டியுள்ளீர்கள்.

இது தொடர்பில் பிரதம நீதியரசருடனும் சட்டக் கல்வி மன்றத்துடனும் கலந்துரையாடி சாதகமான முடிவொன்றை பெற்றுத் தருவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இன்றைய கூட்டத்தில் சட்டக் கல்லூரி அனுமதி விவகாரத்தின் தற்போதைய நிலைமை குறித்து தெரிவிக்கப்பட்ட கருத்துக்களின் ஊடாக இந்தப் பிரச்சினையின் ஆழம் பற்றி நன்கு அறிந்து கொள்ள முடிந்தது.

சட்டக் கல்லூரி பரீட்சை சம்பந்தமாக சில பிரச்சினைகள் ஏற்பட்டன. அவ்வாறான சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உரிய ஆலோசனைகளை வழங்கினார்;. அத்தகைய சந்தர்ப்பத்தில் சட்டக் கல்லூரி மன்றத்தின் சுயாதீன தன்மைக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் ஜனாதிபதி நடந்து கொண்டார்" என்றார்.

இதன்போது நல்லாட்சிக்கான சட்டவுரைஞர் இயக்கத்தினரால் அமைச்சர் ஹக்கீமிடம் மகஜரொன்றும் கையளிக்கப்பட்டது. விவேக பரீட்சை, மொழிப் பரீட்சை ஆகியன 1999ஆம் ஆண்டுக்கு முன்னர் சட்டக் கல்லூரி நுழைவு பரீட்சையின் பகுதிகளாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .