2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

ரிசானா விவகாரம்; டிலானுக்கு எதிராக நம்பிக்கை இல்லா பிரேரணை சமர்ப்பிப்பு

Menaka Mookandi   / 2013 பெப்ரவரி 20 , பி.ப. 07:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கெலும் பண்டார, யொஹான் பெரேரா

வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சர் டிலான் பெரேராவுக்கு எதிராக ஐக்கிய தேசிய கட்சியினால் நேற்று புதன்கிழமை நாடாளுமன்றத்தில் நம்பிக்கை இல்லாப் பிரேரணையொன்று கொண்டுவரப்பட்டது.

சவூதி அரேபியாவில் அண்மையில் தலை துண்டிக்கப்பட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட இலங்கை பணிப்பெண் ரிசானா நபீக்கிற்கு இரக்கத்தின் பேரில் மன்னிப்பு பெறத் தவறிவிட்டார் என குற்றஞ்சாட்டப்பட்மே அமைச்சருக்கு எதிராக இந்த நம்பிக்கை இல்லாப் பிரேரணை கொண்டுவரப்பட்டு சபாநாயகர் சமல் ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டது.
 
சவூதி அரேபிய சட்டத்திற்கமைய இரக்கத்தின் அடிப்படையிலான மன்னிப்பை பெறும் வகையில் இந்த வழக்கை சரியாக முன்வைப்பதற்கு அமைச்சர் டிலான் பெரேராவினால் முடியாமல் போனதால் தான் ரிசானாவுக்கு மரணம் நேர்ந்தது என்று மேற்படி நம்பிக்கை இல்லாப் பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ரிசானா, தனது கவனிப்பில் இருந்த ஒரு சிசுவை கொலை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டார். அவர் மீது ஏழு வருடங்களின் பின் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. இந்த துன்பத்துக்கு அமைச்சர் டிலான் பெரேரா பொறுப்பாக்கப்பட வேண்டும் என் ஐக்கிய தேசிய கட்சி, தனது பிரேரணையில் குறிப்பிட்டுள்ளது.

ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர்களான அஜித் பி.பெரேரா, ஜோசப் மைக்கல் பெரேரா, ரவி கருணாநாயக்க, லக்ஷ்மன் கிரியெல்ல, நிரோஷன் பெரேரா, புத்திக பத்திரண, ரஞ்சன் ராமநாயக்க, சஜித் பிரேமதாச, ஜயலத் ஜயவர்தன, டி.எம்.சுவாமிநாதன், அனோமா கமகே, காமினி ஜயவிக்கிரம பெரேரா உள்ளிட்ட பலர் இந்த நம்பிக்கை இல்லா பிரேரணையில் கைச்சாத்திட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .