2024 மார்ச் 19, செவ்வாய்க்கிழமை

ஜனாதிபதி தேர்தலில் புலிச் சொத்து: ஐ.தே.க.

Thipaan   / 2014 ஒக்டோபர் 27 , பி.ப. 10:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழீழ விடுதலை புலிகள் மீதான தடையை ஐரோப்பிய ஒன்றிய பொது நீதிமன்றம் நீக்கியதையடுத்து குமரன் பத்மநாதனூடாக (கே.பி.) தமிழீழ விடுதலை புலிகளின் சொத்துக்களை ஜனாதிபதி தேர்தலில் அரசாங்கம் பயன்படுத்தக்கூடுமென பிரதம எதிர்கட்சியான ஐ.தே.க. குற்றம் சாட்டியுள்ளது.

கே.பி., தமிழீழ விடுதலை புலிகளின் தற்போதைய தலைவர் என்பதை யாரும் இதுவரை மறுக்கவில்லை. எனவே, அவரால் தமிழீழ விடுதலை புலிகளின் நிதி மற்றும் சொத்துக்களை இலகுவாக வென்றுகொள்ளமுடியும் என ஐ.தே.க .பொதுசெயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.
கட்சியின் தலைமையகமான ஸ்ரீகொத்தாவில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தமிழீழ விடுதலை புலிகள் மீதான தடையை ஐரோப்பிய ஒன்றிய பொதுநீதிமன்றம் நீக்கியுள்ளதால், தமிழீழ விடுதலை புலிகளின் நிதி முடக்கம் நீங்கியதும் கே.பி. உட்பட தற்போதைய தமிழீழ விடுதலை புலிகள் தலைவர்களுடன் தமிழீழ விடுதலை புலிகளின் நிதியை பெற்றுக்கொள்ள முடியும்.

இப்போது அரசாங்கத்தில் பல தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர்கள் உள்ளனர்.

இவர்களுக்கு தமிழீழ விடுதலை புலிகளின் நிதியை பெற்றுக்கொள்ளும் சுதந்திரம் கிடைத்ததும் இவர்கள் என்ன செய்வர் இவர்கள் இந்த நிதியை ஜனாதிபதி தேர்தலில் செலவளிக்கலாம். இது நடைபெறாது என்று கூறமுடியாது என அவர் கூறினார்.

கே.பி., கைது செய்யப்பட்டதும் இந்த அரசாங்கம் பெரிதாக மாயஜாலம் கொட்டியது. கே.பியூடாக தமிழீழ விடுதலை புலிகளின் நிதிகளை இலங்கைக்கு கொண்டுவரப்போவதாகவும் கூறினர்.

அரசாங்கத்தின் கூற்றுப்படி, தமிழீழ விடுதலை புலிகளின் மொத்த சொத்து 200 பில்லியனுக்கும் அதிகமானது. தமிழீழ விடுதலை புலிகள் மீதான தடை காரணமாக அந்த நிதிகளை கொண்டுவர முடியவில்லை என அவர்கள் கூறலாம்.

இப்போது தடை நீக்கப்பட்டுள்ளது. எனவே, தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர்களால் அந்த நிதிகளை பெற முடியும் என்று அவர் தெரிவித்தார்.
தமிழீழ விடுதலை புலிகள் மீதான தடைநீக்கத்தை தடுப்பதற்காக நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்கத்தவறிவிட்டது. நீதிமன்றின் தீர்மானத்துக்கு எதிராக அரசாங்கம் மேன்முறையீடு செய்யவில்லை.

இப்போதைய நிலைமைக்கான பொறுப்பை அரசாங்கம் தட்டிக் கழிக்க முடியாது என அவர் கூறினார். தடையை தொடர்வதற்கான எந்தவொரு சான்றையும் எட்டுவருடங்களாக அரசாங்கம் சமர்ப்பிக்கவில்லை.

இதனால் தான் தமிழ் புலம்பெயர்ந்தோரின் மேன்முறையீடு தொடர்ந்து ஐரோப்பிய ஒன்றிய பொத நீதிமன்றம் தமிழீழ விடுதலை புலிகள் மீதான தடையை நீக்கியது என அத்தநாயக்க எம்.பி மேலும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X