2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தினர் இஸ்லாமியர்கள் இல்லை: காஸி அஸ்கர்

Thipaan   / 2015 ஜனவரி 31 , பி.ப. 11:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தை இஸ்லாமிய தேசம் வன்மையாக கண்டிக்கின்றது. இந்த இயக்கத்தினர் இஸ்லாமியர்கள் இல்லை. இஸ்லாத்தின் எதிரிகளால் உருவாக்கப்பட்ட விசமிகள் என ஈரான் இஸ்லாமிய குடியரசின் ஆன்மீகத் தலைவரும் முப்படையினரின் தளபதியுமான செய்யித் அலீ காமெனயின் ஆலோசகரும்  ஹஜ் உம்ராவுக்கான பிரதிநிதியும் தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான பிரதிநிதியுமான ஆயத்துல்லாஹ் செய்யித் அலி காஸி அஸ்கர் தெரிவித்துள்ளார்.

உத்தியோகபூர்வமற்ற ஒருவார கால  விஜயத்தை அவர் மேற்கொண்டிருந்தார்.

கொழும்பில் அமைந்துள்ள ஈரான் இஸ்லாமிய குடியரசின் அல்முஸ்தபா சர்வதேச பல்கலைக்கழகத்தின் இலங்கை கிளையின் அழைப்பை ஏற்று இவ்விஜயத்தை அவர் மேற்கொண்டிருந்தார்.

அவர், பௌ;த்த கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய அறிஞர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதுடன் சர்வ மத தலைவர்களையும் சந்தித்து கலந்துரையாடினார்.

கத்தோலிக்க பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகையையும் அவர் சந்தித்து கலந்துரையாடினார்.

இந்த சந்திப்புகள் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.

ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தை இஸ்லாமிய தேசம் வன்மையாக கண்டிக்கின்றது. இந்த இயக்கத்தினர் இஸ்லாமியர்கள் இல்லை. இஸ்லாத்தின் எதிரிகளால் உருவாக்கப்பட்ட விசமிகள் என கத்தோலிக்க பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகையையுடனான சந்திப்பின் போது அவர் குறிப்பிட்டார்.

இந்த சந்திப்பின் போது இரு மதத்தலைவரும் இணைந்து, பலஸ்தீனத்தில் இஸ்ரேலினால் மேற்கொள்ளப்படும் மிலேச்சத்தனமான கொடுமைகளை மிகவும் வன்மையாக கண்;டித்தனர்.

அத்துடன், ஹோமாகமையில் அமைந்துள்ள பௌத்த மற்றும் பாளி பல்கலைக்கழகத்துக்கு கடந்த 23ஆம் திகதி வெள்ளிக்கிழமை சென்ற அவர், பல்கலைக்கழகத்தின் பீடாதிபதி  வண.  கல்லெல்ல சுமனசிறி தேரரையும் மற்றும் விரிவுரையாளர்களையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

இலங்கையில் பௌத்த மதம் பரவிய வரலாற்றை கேட்டறிந்துகொண்ட ஆயத்துல்லாஹ், இருமதங்களுக்கிடையிலான மனித நேய பண்புகளைப்பற்றி விளக்கினார். இதனை அடிப்படையாக கொண்டு பேச்சுவார்த்தையை தொடரவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

அத்துடன், கொழும்பில் அமைந்துள்ள அல்முஸ்தபா சர்வதேச பல்கலைக்கழகத்தின் இலங்கை கிளையில் வைத்து அன்று மாலையே முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் அஸ்ஸெய்க் ஸமீல் உள்ளிட்ட இன்னும் பல இஸ்லாமிய அறிஞர்களுடனும் கலந்துரையாடினார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .