2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

தேசிய நல்லிணக்கத்துக்கான ஆதரவு தொடரும்: ஆஸி. வெளிவிவகார அமைச்சர்

A.P.Mathan   / 2015 ஓகஸ்ட் 21 , மு.ப. 10:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் தேசிய நல்லிணக்கத்தைக் கட்டிக் காப்பதற்கு அவுஸ்திரேலிய அரசாங்கம் பூரண ஒத்துழைப்பு வழங்குமென அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் ஜூலி பிஸொப் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் புதிய பிரதமராகப் பதவியேற்றுள்ள ரணில் விக்கிரமசிங்கவுக்கு வாழ்த்துத் தெரிவித்து வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் மேற்படி கூறியுள்ளார்.

"அமைதியான முறையில் கடந்த 17ஆம் திகதி நடைபெற்ற பொதுத் தேர்தலினூடாக மீண்டும் ஆட்சி அதிகாரத்துக்கு வந்துள்ள ரணில் விக்கிரமசிங்கவுக்கு என்னுடைய வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

பிராந்திய மற்றும் சர்வதேச சவால்களை முறியடிப்பதற்கு, இரு நாட்டுக்குமிடையில் காணப்படும் வலுவான பிணைப்பினூடாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் தொடர்ந்தும் சேவையாற்றக் காத்திருக்கிறோம்.

அவுஸ்திரேலியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் வலுவான, நீண்டநாள் உறவு காணப்படுகிறது. அந்த உறவினூடாக வர்த்தக மற்றும் முதலீட்டு உதவிகளைத் தொடர்ந்தும் பரிமாறிக்கொள்ளவுள்ளோம். அத்தோடு தேசிய பாதுகாப்பு மற்றும் ஆட்கடத்தலைத் தடுப்பது போன்ற விவகாரங்களிலும் கூடிய கவனமொடுப்பது தொடர்பிலும் ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கத்துடன் நெருங்கிச் செயற்படவுள்ளோம்.

அத்தோடு, இலங்கையின் தேசிய நல்லிணக்கத்தைக் கட்டிக் காப்பதற்கு அவுஸ்திரேலிய அரசாங்கம் பூரண ஒத்துழைப்பும் வழங்கும்" என அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் ஜூலி பிஸொப் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .