2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

2060 இரத்தின கற்களை உட்கொண்ட நிலையில் சென்னை விமான நிலையத்தில் இலங்கையர் கைது

Super User   / 2010 ஒக்டோபர் 28 , மு.ப. 04:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

சென்னை பொலிஸார், 2060 இரத்தின மற்றும் ஏனைய பெறுமதியான கற்துண்டுகளை உட்கொண்ட நிலையில் கொழும்பிலிருந்து சென்னை விமான நிலையத்திற்கு வந்த  இலங்கையர் ஒருவரை நேற்றுமுன்தினம் கைதுசெய்துள்ளனர். இக்கற்களின் பெறுமதி 1.5 கோடி முதல் 3 கோடி இந்திய ரூபாவாக இருக்கலாம் எது மதிப்பிடப்பட்டுள்ளது.

சென்னையில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாடொன்றில் சென்னை புறநகர பொலிஸ் ஆணையாளர் எஸ்.ஆர்.ஜாங்கித் இது தொடர்பாக கூறுகையில், செவ்வாய் காலை எயார் இந்தியா விமானத்தில் இந்நபர் பயணம் செய்வதாக நம்பகமான வட்டாரத்திலிருந்து தொலைபேசி தகவலொன்று கிடைத்ததாக கூறினார்.

அது மாத்திரமே எமக்கு கிடைத்த தகவல், ஆனால் அவர் சென்னை விமான நிலையத்திற்கு வெளியே வந்து டாக்ஸி ஒன்றில் ஏற முயன்ற சமயம் மடக்கப்பட்டார் என  பொலிஸ் ஆணையாளர் கூறினார்.

மேற்படி இலங்கையர் 35 வயதான மொஹமட் ரபி என இனங்காணப்பட்டுள்ளார். அவர் வெற்றிகரமாக விமான நிலைய சுங்க மற்றும் குடிவரவு சோதனைகளைக் கடந்து வெளியேறினார். உதவி பொலிஸ் ஆணையாளர் எஸ்.விஜயகுமார் தலைமையிலான பொலிஸ் குழுவினர் ரபியை தடுத்து, அவரின் இரு கைப்பைகளை சோதனையிட்டனர். ஆனால் அதில் பலனிருக்கவில்லை.


தான்அப்பாவி எனவும் மருத்துவ சோதனைக்கு உரியவர் எனவும் ரபி கூறினாராம்.

விசாரணையின்போது ரபியினால் சௌகரியமாக அமர்ந்திருக்க முடியவில்லை. தான் மூலநோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக அவர் கூறினார். சந்தேகம் அதிகரித்ததனால் பொலிஸார் குரோம்பேட்டை அரச வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்று சோதனையிட்டபோது அவரின் வயிற்றுக்குள் இரத்தின கற்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

செல்லுபடியான கடவுச்சீட்டை கொண்டிருந்த ரபிக்கு இக்கடத்தல் நடவடிக்கைகாக நியமிக்கப்பட்டு 10 ஆயிரம் ரூபா மாத்திரம் வழங்கப்பட்டிருந்ததாகவும் அவர் 42 ஆணுறைகளில் கற்களை வைத்து அனைத்தையும் விழுங்கியிருப்தாகவும் ஜாங்கித் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .