2024 செப்டெம்பர் 21, சனிக்கிழமை

’6 மாதத்துக்கு இலவச மின்சாரம்’

Editorial   / 2017 ஜூன் 03 , பி.ப. 12:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

வௌ்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்களுக்கு, எதிர்வரும் 6 மாதத்துக்கான மின் விநியோகத்தை, இலவசமாக வழங்குமாறு, சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய அறிவுறுத்தியுள்ளார்.

தற்காலி முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள, வௌ்ள மற்றும் மண்சரிவு அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கும், இந்த சலுகை நீடிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

தற்போதைக்கு, நாடளாவிய ரீதியில், 177,775 பேர், மின் விநியோகம் இல்லாமல் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. மேலதிக பாதிப்புகள் ஏற்படுவதை தடுப்பதற்காக, பாதிக்கப்பட்ட பல்வேறு இடங்களுக்கான மின் விநியோகத்தை துண்டித்துள்ளதாகவும் வௌ்ளத்தால் பாதிக்கப்பட்ட வீடுகளில், மின் சுற்றுகளுக்குள் நீர் சென்று வேறு ஆபத்துக்களை ஏற்படுத்தும் என்று, பாதிக்கப்பட்ட பல மக்களால் கோரப்பட்டதையடுத்து மின் விநியோகங்கள் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

“எவ்வாறாயினும், மின்சாரம் இன்றி இருக்கும் மக்களுக்கான மின்சாரத்தை வழங்குவதற்கு, இலங்கை மின்சார சபையின் தொழில்நுட்ப பொறியியலாளர்கள் தயாராக உள்ளனர்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .