2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

காலை 7 மணிக்கு வாக்களிப்பு: கடும் பாதுகாப்பு ஏற்பாடு

Kanagaraj   / 2014 மார்ச் 28 , பி.ப. 08:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேல் மற்றும் தென் ஆகிய இரண்டு மாகாண சபைகளுக்குமான வாக்களிப்பு இன்று சனிக்கிழமை காலை 7 மணிக்கு ஆரம்பமாகி மாலை 4 மணிக்கு நிறைவடையும் என்று அறிவித்துள்ள தேர்தல்கள் செயலகம் வாக்காளர்கள் தங்களுடைய வாக்குகளை நேரகாலத்துடன் சென்று அளித்துவிடுமாறும் கேட்டுக்கொண்டுள்ளது.

இந்த இருமாகாண சபைகளுக்குமான வாக்களிப்பையொட்டி  பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு கடமையில் 25035 பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்றும் பொலிஸ் ஊடக பேச்சாளர் திணைக்களம் அறிவித்துள்ளது.

வாக்காளர்கள் : 5,898,427
 
•     மேல் மாகாணம் 40 இலட்சம்
•    தென் மாகாணம 19 இலட்சம்
•    கம்பஹா மாவட்டம்  16  இலட்சம்
•    கொழும்பு மாவட்டம்  15  இலட்சம்
•    களுத்துறை மாவட்டம்  9  இலட்சம்
•    மாத்தறை மாவட்டம்  6  இலட்சம்
•    காலி  மாவட்டம்  8 இலட்சம்
•    ஹம்பாந்தோட்டை மாவட்டம்   4.5 இலட்சம்

வாக்கெடுப்பு நிலையங்கள் : 4550

போட்டியிடும் வேட்பாளர்களின் எண்ணிக்கை :  

•    மேல் மாகாணம் : 2743
•    தென் மாகாணம் : 1051

தெரிவு செய்யப்படவேண்டிய உறுப்பினர்களின் எண்ணிக்கை :
 
•    மேல் மாகாண சபைக்கு : 102
•    தென் மாகாண சபைக்கு : 53

களத்தில் :

அரசியல் கட்சிகள் : 25
சுயாதீன குழுக்கள்  :15

பாதுகாப்பு:

•    பாதுகாப்பு கடமையில் பொலிஸார் : 25035
•    ரோந்துசேவையில் ஈடுபடும் பொலிஸ் வாகனங்கள் - 2500

சுகல வாக்களிப்பு மத்திய நிலையங்களிலிருந்தும் வாக்குப்பெட்டிகள் வாக்கெண்ணும் நிலையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டதன் பின்னர் இரவு 7 மணியளவில் வாக்குகளை எண்ணும் நடவடிக்கைகள் ஆரம்பமாகும் என்றும் முதலாவது பெறுபேற்றை நள்ளிரவுக்கு முன்னர் எதிர்ப்பார்க்கலாம் என்றும் தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .