2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

சிங்களவருக்கு எது நல்லதோ, அது தமிழருக்கு நல்லது

Super User   / 2010 ஒக்டோபர் 29 , பி.ப. 09:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

- என்.சத்தியமூர்த்தி

இலங்கையின் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்குமுன், தமிழர்களையும் இணைத்துக்கொள்ளும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் விருப்பத்தை வெளிவிவகார அமைச்சரான ஜி.எல்.பீரிஸ் அண்மையில் புதுடில்லிக்கு வந்தபோது மீண்டும் வலியுறுத்திக் கூறினார். இதையேதான் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பொதுநலவாய நாடுகளின் விளையாட்டு போட்டிகளின் நிறைவு விழாவில் கலந்துகொள்வதற்காக புதுடில்லி வந்தபோது இந்திய பிரதமர் மன்மோகன்சிங்கிடமும்  கூறியிருப்பார் என எடுத்துக்கொள்வோம்.

மஹிந்த ராஜபக்ஷ இரண்டாவது தடவையாக ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டபின் இரு தடவைகள் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் நடத்திய பேச்சுவார்த்தைகள் பற்றியும் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் குறிப்பிட்டார்.

சென்னையில் மருத்துவ சிகிச்சை பெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நாடு திரும்பியுள்ள நிலையில் மேலும் பேச்சுவார்த்தைகள் நடைபெறும் எனவும் ஜி.எல்.பீரிஸ். குறிப்பிட்டார். எல்.ரீ.ரீ.ஈ இருந்த காலத்தில், கட்சி ஆரம்பித்து பல வருடங்களாகிய நிலையில் இப்போதுதான் முதல் தடவையாக, தமிழ் தேசியக் கூட்டமைப்பு தனது கட்சி அலுவலகத்தை திறந்துள்ளது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு தற்போது நான்கு கட்சிகளின் கூட்டாகவே உள்ளது. இந்த கட்சி விரைவில் அடிநிலை நிறுவன அமைப்புகளை கட்டியெழுப்புவதற்கான, அவசியத்தையும் இனங்கண்டு கொள்ள வேண்டும்.

இந்த முயற்சி கஷ்டமானதாக இருப்பினும் இப்படியான நிறுவன அமைப்புகள் மட்டுமே ' இலங்கைத் தமிழ்' சமுதாயத்தின் வலுவான குரலாக தமிழ்தேசிய கூட்டமைப்பை வைத்திருக்க உதவ முடியும். கடந்த ஏப்ரலில் இடம்பெற்ற நாடாளுமன்ற தேர்தலில் 14 இடங்களைப்பெற்றுக் கொடுத்த தமிழ்மக்களின் நல்லெண்ணம் குன்றிப்போக இவ்வாறான அடிநிலை அமைப்புகள் அமையப்பெறாமை காரணமாகலாம்.

தமிழ்; தேசியக் கூட்டமைப்பின் இனவாதம் அல்லாதத் தன்மைக்கு எடுத்துக்காட்டாக விளங்கிய தமிழ்தேசிய கூட்டமைப்பின் சிங்கள உறுப்பினரான பியசேன, விலகிப்போகாமல் அந்த அமைப்பிலேயே இருந்திருக்க வேண்டும். இவர் விலகிச் சென்றமை தமிழ் வாக்காளர்களின் எண்ணத்தில் பழைய நினைவுகளை கிளறிவிட்டுள்ளன. இது யுத்தத்துக்குப் பின்னரான இலங்கையில் கட்சிமாறுதல் என்ற விடயத்தை பொறுத்தவரையில் சிங்களவருக்கு எது நல்லதோ அது தமிழருக்கும் நல்லது  எனக் காட்டியுள்ளது.

இனப்போர் முடிவதற்கு முன்பு கூட, வடக்கு கிழக்கில் தமிழ்பேசும் மக்களிடையே அதிக செல்வாக்குள்ள கட்சி தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்பதை ஏற்றுக்கொள்ள, சேர்த்து இயங்குவதில் ஜனாதிபதி ராஜபக்ஷ அக்கறையுள்ளவராக இருந்துள்ளார். சண்டை முடிவுக்கு வருவதற்கு சற்று முன்னரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பை பேச்சுவார்த்தைக்கு வருமாறு தெளிவான, பகிரங்க அழைப்பை விடுத்திருந்தார். ஆனால் அவர்களை தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகன் என ஏற்கமுடியாது என்பதையும் அவர் தெரிவித்திருந்தார்.

சண்டை முடிந்தபின், தமிழ் தேசியக் கூட்டமைப்பு யதார்த்தத்தை ஏற்றுக்கொண்டுள்ளதாகவே தெரிகிறது. சம்பந்தன் நாட்டில் இல்லாத வேலையிலும் கூட ஏனைய தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைவர்கள், தாம் எப்போது அழைக்கப்பட்டாலும் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக மக்களுக்கும் அதனூடாக அரசாங்கத்துக்கும் கூறி வந்துள்ளனர்.

இதன் மூலம், இன்றைய காலத்தின் யதார்த்தத்தை மக்களை ஏற்கச்செய்து அதன்படி சிந்திக்கவும் செயற்படவும் மக்களை தயார்படுத்தி வந்தனர். புலம்பெயர்ந்தோர் உட்பட தமிழ் சமூகத்தினரிடமிருந்து எந்தவொரு வெளிப்படையான எதிர்ப்பும் வராத நிலையில், ஜனாதிபதி ராஜபக்ஷ தீர்வுக்கான பேச்சுவார்த்தையை தாமதிப்பதற்கு காரணம் எதுவும் இல்லை.

இருப்பினும், தமிழ்கட்சிகளின் பல்வகைப்பட்ட குழுக்களிடையே வேறுபாடான எண்ணங்கள் இருக்கும் என்பதை அரசாங்கம் அங்கீகரிக்க வேண்டிய தேவையுள்ளது. எனவே புனர்வாழ்வு, மீள்கட்டுமானம், இணக்கப்பாடு ஆகியவை தொடர்பில் பொது நிலைப்பாட்டுக்கு வர கால அவகாசம் தேவை என்பதுவும் விளங்கிக் கொள்ளப்பட வேண்டிய விடயமாகும். தேர்தல்கள் என்று வரும்போது, அது வடக்கின் உள்ளுராட்சிமன்ற தேர்தலாக இருந்தாலும், மாகாணசபை தேர்தலாக இருந்தாலும் அவர்கள் பிரிந்து நிற்கலாம்.

எனவே, அரசாங்கம் தேர்தல்களை பயன்படுத்தி இலங்கை தமிழ் சமுதாயம், தமிழ் அரசியல் சமூகம் ஆகியவற்றை பிளவுப்படுத்தும் எண்ணம் இருப்பின் அதை விட்டுவிட வேண்டும். கிழக்கு மாகாணத்தில் தனது முயற்சிகளின் வெற்றிகளை அரசாங்கம் அடிக்கடி சுட்டிக்காட்டுவது பொருத்தமானதே. ஆனால், அந்த சமயத்தில் எல்.ரி.ரி.ஈ இருந்தமையால் அது எதிர்பாராத குழப்பத்தை விளைவித்திருக்கலாம் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். ஆனால் அப்படி ஏதும் நடக்கவில்லை.

அரசாங்கம் சிங்கள சமுதாயத்தையும், அரசியல் சமூகத்தையும் கவனிக்க வேண்டியிருக்கும். ஏதாவது ஒரு பிரச்சினையில் அதுவும் இனப்பிரச்சினை தொடர்பில் சகல சிங்கள கட்சிகளும் ஒருமித்த கருத்தை எட்டும் என யாராவது நினைத்தால் அது குறும்புத்தனமாக, போலியானதாகத்தான் இருக்கும்.

தமிழ் அரசியல் சமூகத்துக்கும் இது பொருந்தும். எனவே அரசாங்கம் முக்கியமாக சிங்கள, தமிழ் கட்சிகளை இணைத்துக் கொள்ள வேண்டும். ஆளும் கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு, சிங்கள தேசிய வாக்;குகளில் கணிசமானதை ஜாதிக ஹெல உறுமய, முன்னைய பங்காளரான ஜே.வி.பி. என்பவற்றினூடாக பெற்றுக் கொண்டிருந்தாலும் எதிர்க்கட்சியான ஐ.தே.கவையும் வெளியே  விடமுடியாது.

நாடாளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை கொண்டுள்ள அரசாங்கம். நாடாளுமன்றத்தில் தேவையான ஆதரவைப் பெற அல்லது பரந்த பிரதிநிதித்துவப் பண்பை பிரதிபலிப்பதாக வேறு எங்கும் தேடவேண்டிய அவசியமில்லை. கண்ணாடியில் பார்த்தாலே போதும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .