2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

’கிழக்கு முனையம் வெள்ளித் தீர்மானம்’

Editorial   / 2021 ஜனவரி 27 , மு.ப. 03:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை விற்பனை செய்வதுமில்லை குத்தகைக்கு வழங்கப்போவதும் இல்லையென, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, ஏற்கெனவே தெளிவாகத் தெரிவித்துள்ளார் எனத் தெரிவித்த அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமே, அரசாங்கம் இந்த நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளதாகவும் தெரிவித்தார்.

கிழக்கு முனையம் தொடர்பில், பொய்யான பிரசாரம் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் சாடினார். 

நுவரெலியாவில் நேற்று (26) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். தொடர்ந்துரைத்த அவர், 'கிழக்கு முனையத்தில் 51 சதவீதம் இலங்கைக்கும் 49 சதவீதம் இந்தியா, ஜப்பான், இலங்கை போன்ற நாடுகளுக்கும் உரியது' என்றார்.

இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக, எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஜனாதிபதித் தலைமையில், ஆளும் கட்சி பாராளுமன்றக் குழுக் கூட்டம் நடைபெறவுள்ளது. அதன் பின்னர் இது தொடர்பில் உத்தியோகப்பூர்வ தீர்மானம் எடுக்கப்படும் என்றார். 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .