2024 மே 08, புதன்கிழமை

கழிவு கொள்கலன்கள் மீண்டும் இங்கிலாந்துக்கு

Editorial   / 2020 செப்டெம்பர் 27 , மு.ப. 11:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

2017ஆம் ஆண்டு இங்கிலாந்திலிருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் கழிவுகள் அடங்கிய 21 கொள்கலன்களை, மீண்டும் இங்கிலாந்துக்கே திருப்பியனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சட்டமா அதிபரின் ஆலோசனைக்கமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுங்கத் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் சுனில் ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

2013ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலைப் பயன்படுத்தி, பயன்படுத்திய மெத்தைகள் எனத் தெரிவித்து, இலங்கைக்கு அனுப்பப்ட்ட கொள்கலன்களில் காபட், பிளாஸ்டிக், பொலித்தின் உள்ளிட்ட கழிவுகள் காணப்பட்டதாக சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X