2024 மே 09, வியாழக்கிழமை

’சரியான முடிவெடுத்திருந்தால் ஆட்சி கவிழ்ந்திருக்கும்’

Editorial   / 2019 ஜூலை 12 , மு.ப. 11:20 - 1     - {{hitsCtrl.values.hits}}

எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோர் சரியான தீர்மானமொன்றை எடுத்திருந்தால், மக்கள் விடுதலை முன்னணி முன்வைத்த நம்பிக்கையில்லா பிரேரணை வெற்றிப்பெற்றிருக்கும் என, அக்கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

அவர் அங்கு கூறுகையில், “ சம்பந்தன் மற்றும் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் சரியான தீர்மானமொன்றை எடுத்திருந்தால் நம்பிக்கையில்லா பிரேரணை வெற்றிப்பெற்றிருக்கும்.

விசேடமாக, கல்முனையில் தனியான பிரதேச சபையை உருவாக்கி தருவதாக  மாலை 4.30  மணிக்கு சம்பந்தனுடன் ரணில் விக்கிரமசிங்க கடிதம் ஊடாக இணங்கியுள்ளார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, கப்பம் வழங்கும் அரசியல் ஊடாகத்தான் நம்பிக்கையில்லா பிரேரணையை வெற்றிக்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளார்.

30 நிமிடங்களுக்குள் நிதியமைச்சர் மங்கள சமரவீ அதற்கு தேவையான நடவடிக்கைகளை செய்து முடித்துள்ளார்.

கப்பம் வழங்கியதாலேயே 119 வாக்குகள் வரை முன்னேறிச் சென்றனர். இல்லையென்றால் அரசாங்கத்துக்கு 105 வாக்குகளே காணப்பட்டன.” என்றார்.


You May Also Like

  Comments - 1

  • கபிலன் Friday, 12 July 2019 07:50 AM

    தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ்மக்களை முட்டாள்களாக்கி சுய இலாபங்களுக்காக இந்த அரசுக்கு முண்டுகொடுத்து வருகிறது.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X