2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் எம்.பிக்கு பிணை

Editorial   / 2020 ஜனவரி 07 , பி.ப. 02:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

3 வருட கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரண குணவர்தனவுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுவை அடுத்து அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரண குணவர்தனவுக்கு 3 வருட கடூழிய சிறைத் தண்டனையை கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன, இன்று (07) பிறப்பித்திருந்தார்.

மோசடியான முறையில் நிதி பரிவர்தனைகளின் ஊடாக அரசாங்கத்துக்கு நட்டம் ஏற்படுத்திய குற்றச்சாட்டில்  இந்த தண்டனை விதிக்கப்பட்டது.

சரண குணவர்தன, அபிவிருத்தி லொத்தர் சபையின் தலைவராக இருந்த போது, 2007ஆம் ஆண்டு மே மாதம் 05ஆம் திகதி முதல் 2008ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 30ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இந்த ஊழல் மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .