2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

தத்தளித்த மீன்பிடி படகை அமெரிக்க விமானம் கண்டறிந்தது

Editorial   / 2018 ஜூலை 12 , மு.ப. 12:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேசக் கடலில் மிதந்துகொண்டிருந்த பலநாள்கள் தங்கியிருந்து மீன்பிடியில் ஈடுபடும், மீன்பிடிப் படகை, அமெரிக்கக் கடற்படையின் கடல்ரோந்து விமானம் கண்டறிந்துள்ளதென, கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பி-8ஏ, போஸிடான் என்ற விமானமே இதற்குப் பயன்படுத்தப்பட்டதாகவும், இலங்கைக் கடற்படையினரின் கோரிக்கை அமைவாகவே, கூட்டுத் தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன என்றும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மீனவர்கள் எழுவருடன் கடந்த 20ஆம் திகதி தொழிலுக்குச்  சென்ற பல நாள்கள் தங்கியிருந்து மீன்பிடியில் ஈடுபடும், அகநிஸ” எனப்படும் குறித்த படகே, சர்வதேசக் கடலில் தத்தளித்தது.

இயந்திரக் கோளாறு காரணமாக, சர்வதேசக் கடலில் மிதந்துகொண்டிருக்கின்றது என்று தெரிவித்த மீன்பிடித் திணைக்களத்தின் தேடுதல் நடவடிக்கைக்குப் பொறுப்பான பணிப்பாளர் எஸ்.டீ.பீ திசேரா, அப்படகையும், மீனவர்களையும் கரை சேர்க்கும் நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன என்றார்.

“குறித்த படகு, தியேகோ கார்சியா – மாலைதீவு உள்ளிட்ட நாடுகளுக்கிடையிலான சர்வதேசக் கடலில் மிதந்துகொண்டிருப்ப​தை ரோந்துவிமானம், புகைப்படமெடுத்து அனுப்பிவைத்துள்ளது என்றும் தூதரகம் விடுத்திருந்த ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .