2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

‘படைப்புழுவின் தாக்கம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது’

Editorial   / 2019 பெப்ரவரி 11 , மு.ப. 09:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

படைப்புழுவின் தாக்கம் கட்டுபடுத்தப்பட்டுள்ளதாக விவசாயத் தி​ணைக்களம் தெரிவித்துள்ளது.

எனவே வழமைப்போல் விவசாயிகள் சோளப் பயிர்ச்செய்கையில் ஈடுபடுமாறும் திணைக்களம் விவசாயிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.

82,000 ஹெக்டயர் நிலப்பரப்பில் செய்கைப் பண்ணப்பட்டிருந்த சோளமானது படைப்புழுவின் தாக்கத்தால் 5 சதவீதமே அழிவடைந்துள்ளதெனவும் தற்போது சேனாவின் தாக்கம் கட்டுபடுத்தப்பட்டுள்ளதெனவும் விவசாயத் திணைக்களத்தின் திட்ட மற்றும் பயிற்சி மத்திய நிலைய பணிப்பாளர் கே.பி. குணரத்ன தெரிவித்துள்ளார்.

அத்துடன் சோள உற்பத்திக்காக புதிய முறைகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சோளச் செய்கைகளுக்கிடையில் 4 அடி இடைவெளி இருக்க வேண்டுமென்பதுடன், சோளக் கன்றுகளுக்கிடையில் 30 -45 சென்றிமீற்றர் இடைவெளி இருக்க வேண்டும் என்றும்  திணைக்களம் தெரிவித்துள்ளதுடன், இதன்மூலம் ​படைப்புழுவின் தாக்கத்தை குறைத்துக்கொள்ளலாம் என்றும் விவசாயத் திணைக்களம் தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .