2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

மட்டக்களப்பில் மனிதத் தலை மீட்பு

Nirosh   / 2021 பெப்ரவரி 27 , பி.ப. 06:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

(க.விஜயரெத்தினம்)

மட்டக்களப்பு -  களுவாஞ்சிகுடி கிராமத்தில் சிதைவடைந்தநிலையில், மனித தலை ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

களுவாஞ்சிகுடி தெற்கு, பழைய மக்கள் வங்கி வீதியில் அமைந்துள்ள தனியாருக்கு சொந்தமான குடியிருப்பு காணியொன்றில் வீசப்பட்ட நிலையில் அழுகிய மனித தலையொன்று நேற்று (26) மீட்கப்பட்டுள்ளது.

கடந்த வியாழக்கிழமை (25) மாலை அப்பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றின் முன்னால், மோட்டார் சைக்கிளில் பயணித்த மூவர் வாய்த் தர்க்கத்தில் ஈடுபட்டனர். வளர்ப்பு நாயால் இந்த வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் குறித்த வீட்டின் உரிமையாளர் அச்சுறுத்தப்பட்டுள்ளதோடு, அதுத் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இச்சம்பவம் இடம்பெற்று இரண்டு மணித்தியாலங்களுக்குப் பின்னர் குறித்தக் குடியிருப்புப் பகுதியில் மனிதத் தலையொன்று வீசப்பட்டுள்ளது. இதுத் தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, விசாரணைகளை மேற்கொண்டப் பொலிஸார் மூன்று சந்தேகநபர்களைக் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், மீட்கப்பட்ட மனித தலை களுவாஞ்சிகுடி பொது மயானத்தில் இருந்து தோண்டி எடுக்கப்பட்டதாகவும், கடந்த டிசெம்பர் மாதம் உயிரிழந்து அடக்கம் செய்யப்பட்ட 83 வயதுடைய பெண்ணின் தலையெனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .