2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

முன்னாள் கடற்படைப் பேச்சாளருக்கு விளக்கமறியல்

Editorial   / 2017 ஜூலை 14 , மு.ப. 11:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

2008 மற்றும் 2009ஆம் ஆண்டுக் காலப்பகுதிகளில், கொழும்பில் 11  இளைஞர்களைக் கடத்திச்சென்று, அவர்களை சட்டவிரோதமாகத்  தடுத்துவைத்து காணாமலாக்கிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இலங்கைக் கடற்படையின் முன்னாள் பேச்சாளர் டீ.கே.பி.தசநாயக்கவை, எதிர்வரும் ஜூலை 19ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு ஏற்பட்டுள்ள சுகவீனம் காரணமாக, கடந்த திங்கட்கிழமை, வெலிசர கடற்படை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று, தெரிவிக்கப்பட்டிருந்தது.

அவர், கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோதே, அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

 மேற்படி இளைஞர்கள் காணாமலாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காக, குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு வருகை தருமாறு அறிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும், அவர் வருகை தந்திருக்கவில்லை.

இந்நிலையிலேயே, அவர் அனுமதிக்கப்பட்டிருந்த வெலிசர கடற்படை வைத்தியசாலைக்குச் சென்ற குற்றப்புலனாய்வுப் பிரிவினர், அவரைக் கைது செய்திருந்தனர்.

மேற்படி இளைஞர்கள் விவகாரம் தொடர்பில், சந்தேகத்தின் பேரில், ஏற்கெனவே கைதுசெய்யப்பட்ட கடற்படை அதிகாரிகள் ஐவரும், தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, மேற்படி கடத்தல் சம்பவங்களுடன் தொடர்புடையவர் என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ள லெப்டினன்ட் கொமாண்டர் பிரசாத் ஹெட்டியாராச்சியைக் கைதுசெய்யுமாறு, நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .