2024 மே 04, சனிக்கிழமை

வெளிநாட்டு தயாரிப்பிலான 300 சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது

Editorial   / 2019 பெப்ரவரி 11 , பி.ப. 03:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

துசித குமார டீ சில்வா

பேருவளை-கங்கானம்கொட பிரதேசத்தில், நாட்டுக்கு இறக்குமதி செய்யப்பட்ட வெளிநாட்டுத் தயாரிப்பிலான 300 சிகரெட்டுகளுடன், அப்பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பேருவளை பொலிஸாரால், இவர் இன்று (11) கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேகநபர் தன்னிடமுள்ள சிகரெட்டுகளை அப்பகுதியில் விற்பனைச் செய்து வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சந்தையில் விற்பனைச் செய்யப்படும் வெளிநாட்டு சிகரெட்டுகளின் விலையை விட, குறைந்த விலையில் சந்தேகநபர் விற்பனைச் செய்து வந்துள்ளமை  பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பக்கட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

கைதான சந்தேகநபரை நீதிமன்றில் ஆஜர்படுத்த, பேருவளை பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .