2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

102 காசோலைகளை அழித்துள்ள மென்டிஸ் நிறுவனம்

Editorial   / 2018 செப்டெம்பர் 13 , பி.ப. 04:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

டபிள்யு. ​எம். மென்டிஸ் நிறுவனம் ஊடாக மூன்றாம் தரப்பினருக்காக, வழங்கப்பட்டதாகக் கூறப்படும் 102 காசோலைகள் குறித்த நிறுவனத்தால் அழிக்கப்பட்டுள்ளதாக, சட்டமா அதிபரை பிரதிநிதித்துவப்படுத்தி பிரதி சொலிஸிட்டர் ஜெனரல், ஜனாதிபதி சட்டத்தரணி யசந்த கோதாகொட கொழும்பு கோட்டை நீதவான் லங்கா ஜயரத்னவிடம் தெரிவித்துள்ளார்.

மத்திய வங்கி பிணைமுறி  விவகாரம் தொடர்பான வழக்கு  இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே ஜனாதிபதி சட்டத்தரணி யசந்த கோதாகொட இதனைத் தெரிவித்துள்ளார்.

மத்திய வங்கி பிணைமுறி விவகாரம் தொடர்பாக ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் விசாரணைகள் இடம்பெற்ற சந்தர்ப்பத்தில், டபிள்யு. எம். மென்டிஸ் நிறுவனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரிகளின் ஒழுங்கு விதிகளுக்கு அமைய, குறித்த கா​சோலைகள் அழிக்கப்பட்டுள்ளதாக, அங்கு பணிபுரிந்த பணியாளர் ஒருவர் குற்ற விசாரணைப் திணைக்களத்தில் அளித்துள்ள ஒப்புதல் வாக்குமூலத்துக்கு அமைய, இந்த விடயம் தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .